கையும் ஓடல காலும் ஓடல.. iPhone 13, iPhone 14 மீது பெரிய ஆபர்.. ரெண்டுல எதை வாங்குறதுன்னு தெரியலயே!
வழக்கமாக லேட்டஸ்ட் ஐபோன் மாடல்கள் அறிமுகமான பின்னரே அதற்கு முன் வெளியான ஐபோன்களின் மீது தள்ளுபடிகள் மற்றும் திடீர் சலுகைகள் அறிவிக்கப்படும். ஆனால் தற்போது புதிய ஐபோன் 15 சீரிஸ் அறிமுகமாகும் முன்பே ஐபோன் 14 மற்றும் ஐபோன் 13 மீது பெரும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது!
ஆனால் இந்த தள்ளுபடிகள் வருகிற மார்ச் 5 ஆம் தேதி வரை மட்டுமே அணுக கிடைக்கும் ஏனென்றால் இந்த ஆபர், பிளிப்கார்ட்டின் ஹோலி பண்டிகை சிறப்பு விற்பனையின் (Flipkart Holi Sale) கீழ் கிடைக்கிறது. இன்று முதல் (அதாவது மார்ச் 3) தொடங்கிய இந்த சிறப்பு விற்பனை வருகிற மார்ச் 5 ஆம் தேதியோடு முடிவடைகிறது.

80% தள்ளுபடியை அறிவித்துள்ள Flipkart
பிக் பச்சத் தமால் சேல் 2023 (Big Bachat Dhamaal Sale 2023) என்கிற பெயரின் கீழ் நடக்கும் இந்த சிறப்பு விற்பனையின் போது 1,000க்கும் மேற்பட்ட பிராண்டுகளில் இருந்து 100,000 க்கும் மேற்பட்ட தயாரிப்புகளுக்கு 80 சதவீதம் வரையிலான தள்ளுபடி கிடைக்கும் என்று பிளிப்கார்ட் அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் ஆப்பிள் ஐபோன் 13 மற்றும் ஐபோன் 14 மாடலும் அடங்கும்.
iPhone 13 மீது கிடைக்கும் தள்ளுபடி
128ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் ஐபோன் 13-இன் அசல் விலை ரூ.69,900. இருப்பினும் மார்ச் 5 வரை நடக்கும் பிளிப்கார்ட்டின் சிறப்பு விற்பனையின் போது ரூ.7,901 என்கிற நேரடி தள்ளுபடி கிடைக்கும். இதன்மூலம் ஐபோன் 13-ன் விலையை ரூ.61,999 ஆக குறைக்க முடியும். அதன் பின்னர் எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் வங்கி சலுகைகள் பயன்படுத்தினால் இறுதி விலையை இன்னும் குறைக்க முடியும்.
iPhone 13 மீது கிடைக்கும் எக்ஸ்சேஞ்ச் போனஸ்
பிளிப்கார்ட் வலைத்தளமானது ஐபோன் 13 மீது ஒரு பெரிய எக்ஸ்சேஞ்ச் போனஸை (Exchange Bonus) வழங்குகிறது. இதன் கீழ் உங்களால் (அதிகபட்சமாக) ரூ.23,000 வரை சேமிக்க முடியும். இதற்காக நல்ல நிலையில் உள்ள உங்களுடைய பழைய ஸ்மார்ட்ப்போனை எக்ஸ்சேஞ்ச் செய்ய வேண்டியிருக்கும்.
iPhone 13 மீது கிடைக்கும் பேங்க் ஆபர்கள்
நேரடி தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸுடன் சேர்த்து ஐபோன் 13 மீது வங்கி சலுகைகளும் கிடைக்கிறது. நீங்கள் எச்டிஎப்சி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தினால் கேஷ்பேக் மற்றும் நோ-காஸ்ட் இஎம்ஐ போன்ற சலுகைகளும் கிடைக்கும். எல்லா வகையான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளையும் சரியாக பயன்படுத்தினால் ஐபோன் 13-இந்த விலையை ரூ.40,000 க்குள் கொண்டு வர முடியும்!
iPhone 14 மீது கிடைக்கும் தள்ளுபடி
ஐபோன் 13 மீது மட்டுமல்ல இந்த பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையின் போது ஐபோன் 14 மீதும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற மார்ச் 5 ஆம் தேதி வரையிலாக ஐபோன் 14 மாடலானது அசல் விலையான ரூ.71,999 க்கு பதிலாக ரூ.67,999 க்கு வாங்க கிடைக்கும். கூடுதலாக எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் வங்கி சலுகைகளும் கிடைக்கும்.
Flipkart Holi Sale 2023: வேறு என்னென்ன தயாரிப்புகள் மீது சலுகைகள் கிடைக்கும்?
பிளிப்கார்ட்டின் இந்த பிக் பச்சத் தமால் விற்பனையின் போது ஃபர்னீச்சர்கள், சமையலறை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் போன்ற மற்ற தயாரிப்புகள் மீதும் ஏராளமான தள்ளுபடிகள் கிடைக்கிறது. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ஃபர்னீச்சர்கள் மீது 70% வரை தள்ளுபடியும், ஃபிரிட்ஜ்கள் மீது 60% தள்ளுபடியும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications







