Home
Mobile

இதை விட கம்மி விலையில் மோட்டோரோலா 5G போன்கள் கிடைக்காது: ஆபர் போட்டு அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!

பிளிப்கார்ட் தளத்தில் Flipkart's Moto Days Sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனை வரும் பிப்ரவரி 4-ம் தேதி வரை இருக்கும். குறிப்பாக இந்த பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் அசத்தலான இரண்டு மோட்டோரோலா 5ஜி போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா ஜி82 5ஜி

அதாவது மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா மற்றும் மோட்டோரோலா ஜி82 5ஜி போன்களுக்கு தான் தற்போது தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மோட்டோரோலா ஜி82 5ஜி ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.23,999-ஆக இருந்தது. இப்போது அறிவிக்கப்பட்ட தள்ளுபடி மூலம் ரூ.18,999-க்கு வாங்க கிடைக்கிறது இந்த மோட்டோரோலா ஜி82 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை இன்னும் குறைவான விலையில் வாங்கலாம்.

இதை விட கம்மி விலையில் மோட்டோரோலா 5G போன்கள் கிடைக்காது.!

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் முன்பு ரூ.69,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த ஸ்மார்ட்போன் ரூ.54,999-க்கு வாங்க கிடைக்கிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை இன்னும் குறைவான விலையில் வாங்க முடியும்.

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா அம்சங்கள்

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2400 x 1080 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த போனில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதி உள்ளது. கூடிய விரைவில் ஆண்ட்ராய்டு 13 அப்டேட் கிடைக்கும்.

இந்த மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 4610 எம்ஏஎச் பேட்டரி வசதி மற்றும் 125 வாட்ஸ் டர்போ பவர் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன்.

இதை விட கம்மி விலையில் மோட்டோரோலா 5G போன்கள் கிடைக்காது.!

200எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 12எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தெளிவான படங்களை எடுக்க முடியும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 60எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா போன்.

மோட்டோரோலா ஜி82 5ஜி அம்சங்கள்

மோட்டோரோலா ஜி82 5ஜி ஸ்மார்ட்போன் 6.6-இன்ச் AMOLED ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1080 x 2400 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 33 வாட்ஸ் டர்போபவர் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர், டால்பி அட்மோஸ், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி82 5ஜி ஸ்மார்ட்போன்.

மோட்டோ ஜி82 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் MyUX சார்ந்த ஆண்ட்ராய்டுஅ 12 இயங்குதளத்தைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த மோட்டோரோலா ஜி82 5ஜி ஸ்மார்ட்போன்.

இதை விட கம்மி விலையில் மோட்டோரோலா 5G போன்கள் கிடைக்காது.!

50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி82 5ஜி போன். பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி82 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart has announced discounts on MOTOROLA g82 5G and MOTOROLA Edge 30 Ultra phones.: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X