Home
Mobile

ஆஃபரில் அதிரடி காட்டும் Flipkart.. 50MP கேமரா.. 128GB மெமரி.. மலிவு விலையில் POCO போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் grand festive sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனை ஆனது வரும் அக்டோபர் 20-ம் தேதி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த போக்கோ போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது போக்கோ எம்6 ப்ரோ 5ஜி (POCO M6 Pro 5G) போனுக்கு தான் தற்போது பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்6 பரோ போனுக்கு 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.11.999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடி கிடைக்கும்.

ஆஃபரில் அதிரடி காட்டும் Flipkart..மலிவு விலையில் POCO போன்..

இப்போது போக்கோ எம்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம். ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜெனரல் 2 4என்எம் (Octa Core Snapdragon 4 Gen 2 4nm) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த போக்கோ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மூலம் இயங்குகிறது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் (FHD+) எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எம்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 500 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த போக்கோ எம்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

இந்த போக்கோ எம்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது . எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா வசதி இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

குறிப்பாக இந்த போனின் சிப்செட் மற்றும் கேமரா பகுதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போக்கோ நிறுவனம். 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு வெளிவந்துள்ளது இந்த போக்கோ எம்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேசமயம் விரைவில் இந்த போனை சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஃபரில் அதிரடி காட்டும் Flipkart..மலிவு விலையில் POCO போன்..

மேலும் சைடு மவுண்டென்ட் பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared sensor), டூயல் நானோ சிம் மற்றும் எஸ்டி கார்டு போர்ட், டைப் - சி சார்ஜிங் போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக், பாட்டம் ஃபயரிங் லவுட்ஸ்பீக்கர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளன.

ப்ளூடூத் 5.1, வைபை 6 802.11 ஏசி, 5ஜி எஸ்ஏ உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போன். 199 கிராம் எடை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதேபோல் கம்மி விலையில் ஸ்னாப்டிராகன் சிப்செட், 50எம்பி கேமரா, 5ஜி ஆதரவு, 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart Grand Festive Sale: POCO M6 Pro 5G is available at 25 percent discoun: check details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X