அம்மாடியோ.. பாதி விலை இல்ல அதைவிட கம்மி.. Samsung பிரீமியம் 5ஜி போன்.. Flipkart ஒரே போடு.. எந்த மாடல்?
வரவிருக்கும் பண்டிகை கால விற்பனையில் - ஐபோன் 16 மீதான ஆபர்லாம் ஒன்னுமே இல்ல என்று கூறும் அளவிற்கு வரவிருக்கும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2025 விற்பனையின் போது சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா (Samsung Galaxy S24 Ultra) ஸ்மார்ட்போன் ஆனது.. பாதிக்கும் குறைவான விலையில் வாங்க கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
டெசிடைம்.காம் (Desidime.com) இல் உள்ள ஒரு பதிவின்படி, வரவிருக்கும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது ரூ.59,999 க்கு வாங்க கிடைக்கும். இந்த டீல் குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் மீது கிடைக்கும்.

நினைவூட்டும் வண்ணம் சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.1,29,999 க்கு அறிமுகமானது. உண்மையிலேயே இது ரூ.59,999 க்கு கிடைக்கும் பட்சத்தில், பிளிப்கார்ட் ஆனது இதற்கு ரூ.59,999 டிஸ்கவுண்ட்டை வழங்கும் என்று அர்த்தம். அதாவது பாதிக்கு பாதி டிஸ்கவுண்ட் அல்ல; அதைவிட அதிகமான டிஸ்கவுண்ட்டை வழங்கும்.
இந்த ஆபர் விலையானது - தள்ளுபடிகள் மற்றும் வங்கி சலுகைகள் ஆகியவைகளை உள்ளடக்கிய விலையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பிளிப்கார்ட் வலைத்தளம் ஆனது இன்னுமும் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கான சலுகைகளை குறித்து எந்த விவரங்களையும் வெளியிடவில்லை. நினைவூட்டும் வண்ணம் பிளிப்கார்ட் தளத்தின் சிறப்பு விற்பனை செப்டம்பர் 23 ஆம் தேதி அன்று தொடங்க உள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 2600 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ்
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- கொரில்லா கிளாஸ் ஆர்மர் ப்ரொடெக்ஷன்
- டைட்டானியம் பிரேம்
- 6.8-இன்ச் டைனமிக் அமோஎல்இடி 2எக்ஸ் டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்
- 7 வருட ஓஎஸ் அப்டேட்கள் கிடைக்கும் (ஆண்ட்ராய்டு 14 தொடங்கி)
- குவாட் ரியர் கேமரா செட்டப்
- 200 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார்
- 12 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
- 50 மெகாபிக்சல் 5எக்ஸ் டெலிஃபோட்டோ லென்ஸ்
- 10 மெகாபிக்சல் 3எக்ஸ் டெலிஃபோட்டோ லென்ஸ்
- 12 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- லைவ் டிரான்ஸ்லேட் ஏஐ அம்சம்
- சர்க்கிள் டு சர்ச் ஏஐ அம்சம் -
- 45W வயர்டு பாஸ்ட் சார்ஜிங்
- 15W வயர்லெஸ் சார்ஜிங்
- ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு
- 5000mAh பேட்டரி
ஐபோன் 16 மீதான ஆபர்: வருகிற செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2025 விற்பனையின் போது ஐபோன் 16 மாடல் ஆனது ரூ. 51,999 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும் என்பதை பிளிப்கார்ட் வலைத்தளம் ஆனது அதன் மொபைல் ஆப்பில் உள்ள பிக் பில்லியன் டேஸ் சேல் பக்கம் வழியாக உறுதிப்படுத்தியுள்ளது
சுவாரஸ்யமாக குறிப்பிட்ட மைக்ரோசைட் ஆனது "நீங்கள் பார்ப்பதை தான் செலுத்த வேண்டும்" மற்றும் "விதிமுறைகள் பொருந்தாது" போன்ற டேக்லைன்களையும் கொண்டுள்ளது. ஆக ஐபோன் 16 மீதான இந்த விலைக்குறைப்பானது - தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பெறக்கூடிய கூடுதல் வங்கி சலுகையாக இருக்காது; நேரடி விலைகுறைப்பாக இருக்கலாம்.
நினைவூட்டும் வண்ணம், ஐபோன் 16 மாடல் ஆனது கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமான போது ரூ.79,900 (பேஸிக் 128ஜிபி ஆப்ஷன்) க்கு வாங்க கிடைத்தது. தற்போது இதே 128ஜிபி ஆப்ஷன், ஐபோன் 17 அறிமுகத்திற்கு பிறகான விலை குறைப்பை தொடர்ந்து பிளிப்கார்ட் வலைத்தளத்தில் ரூ.74,900 க்கு வாங்க கிடைக்கிறது. செப்.23 தொடங்கும் விற்பனையில் இன்னும் மலிவான விலைக்கு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications