Home
Mobile

அமேசானை கதறவிடும் GOAT.. 10001mAh முதல் 7000mAh பேட்டரி வரை.. தள்ளுபடி விலையில் புது Realme 5ஜி போன்கள்!

ஜூலை 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இரண்டு இகாமர்ஸ் வலைத்தளங்களும் - முறையே பிரைம் டே சேல் மற்றும் கோட் சேல் என்கிற சிறப்பு விற்பனைகளை நடத்த உள்ளன. இதன் விளைவாக இவ்விரு தளங்களுமே போட்டிபோட்டு கொண்டு ஸ்மார்ட்போன்கள் மீதான ஆபர்களை அறிவித்துள்ள.

அப்படியாக அமேசானை கதறவிடும் படியாக, பிளிப்கார்ட் வலைத்தளம் ஆனது ரியல்மி பி4 5ஜி சீரீஸின் (Realme P4 5G Series) கீழ் உள்ள 4 ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடிகளை றிவித்துள்ளது: இந்த சீரிஸின் கீழ் ரியல்மி பி4ஆர் 5ஜி (Realme P4R 5G), ரியல்மி பி4 பவர் 5ஜி (Realme P4 Power 5G), ரியல்மி பி4 ப்ரோ 5ஜி (Realme P4 Pro 5G) மற்றும் ரியல்மி பி4எக்ஸ் 5ஜி (Realme P4x 5G) உள்ளிட்ட பல மாடல்கள் உள்ளன.

Realme..10001mAh முதல் 7000mAh பேட்டரி வரை.. தள்ளுபடி விலை!

இந்த சீரிஸின் மிகவும் பிரீமியம் (premium) மாடலான, 10001எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ள ரியல்மி பி4 பவர் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு ரூ.2,000 தள்ளுபடி கிடைக்கிறது. இதில் ரூ.1,000 நேரடி தள்ளுபடியும், ரூ.1,000 கார்டு (Card) சலுகையும் அடங்கும். இதன் 8ஜிபி ரேம்+ 128ஜிபி ஆப்ஷனின் அசல் விலை ரூ.29,999 ஆகும், ஆனால் சலுகை விலையாக இது ரூ.27,999 க்கு வாங்க கிடைக்கும்.

இதேபோல ரியல்மி பி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு ரூ.2,000 நேரடித் தள்ளுபடியும், ரூ.1,000 வங்கி தள்ளுபடியும் (bank discount) வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.28,999 க்கு பதிலாக ரூ.25,999 க்கு வாங்க கிடைக்கும்.

ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு ரூ.1,000 தள்ளுபடி உள்ளது. இதன் பேஸிக் மாடலான 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் சலுகைகளுடன் ரூ.20,499 க்கு வாங்க கிடைக்கும். கடைசியாக 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி பி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.18,999 ஆகும். ரூ.1,000 தள்ளுபடிக்கு பின்னர் இது ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கும்.

ரியல்மி பி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- 6.8-இன்ச் FHD+ (1080 × 2800 பிக்சல்ஸ்) AMOLED 4D கர்வ் பிளஸ் டிஸ்பிளே
- 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 6500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன்

- ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட்
- 12GB வரை LPDDR4X ரேம் மற்றும் 256GB வரை UFS 3.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- Android 15 அடிப்படையிலான Realme UI 6 ஓஎஸ்
- AI ஆதரவு உடனான ஹைப்பர் விஷன் சிப்செட்

- வெப்ப மேலாண்மைக்காக 7,000 சதுர மிமீ ஏர்ஃப்ளோ விசி கூலிங் சிஸ்டம்
- AI லேண்ட்ஸ்கேப், AI ஸ்னாப் மோட், AI பார்ட்டி மோட் மற்றும் AI டெக்ஸ்ட் ஸ்கேனர் உள்ளிட்ட பல AI அம்சங்கள்
- ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடன் 50-மெகாபிக்சல் சோனி IMX896 பிரைமரி சென்சார்

- 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர்
- முன்பக்கத்தில் 50-மெகாபிக்சல் OV50D செல்பீ சென்சார்
- முன் மற்றும் பின்புற கேமராக்கள் இரண்டும் 60fps இல் 4K வீடியோ ரெக்கார்ட் செய்யும்
- 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் சார்ஜிங்
- 7,000mAh பேட்டரி

- 5ஜி, 4ஜி, வைஃபை 6, ப்ளூடூத் 5.4, GPS மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP65 மற்றும் IP66 ரேட்டிங்
- இன்-டிஸ்ப்ளே ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- அளவீட்டில் 7.68 மிமீ தடிமன் மற்றும் எடையில் 187 கிராம்.

Best Mobiles in India

English summary
Flipkart GOAT Sale Realme P4R Realme P4 Power Realme P4 Pro Realme P4x 5G July 4 5 6 Offer Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X