புது ஐபோன் வாங்கலையோ.. கூப்பிட்டு கொடுக்கும் பிளிப்கார்ட்.. அடிமட்ட விலையில் iPhone 15, iPhone 16, iPhone 17!
பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்தில் வருகிற ஜூலை 4 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள கோட் சேல் (GOAT SALE) சிறப்பு விற்பனையின் போது என்னென்ன ஐபோன் (iPhone) மாடல்கள் மீது எவ்வளவு சலுகைகள் கிடைக்கும் என்கிற விவரங்களை பிளிப்கார்ட் வலைத்தளம் வெளியிட்டுள்ளது.
அடுத்த வாரம் தொடங்கவுள்ள இந்த விற்பனையில் - விலை குறைப்பு, வங்கி சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் (பழைய போனை மாற்றிக்கொள்ளும்) சலுகைகள் மூலம் வாடிக்கையாளர்கள் ஐபோன் 17 (iPhone 17) சீரிஸ், ஐபோன் 16 (iPhone 16) சீரிஸ் மற்றும் ஐபோன் 15 (iPhone 15) ஆகிய மாடல்களை மிக குறைந்த சலுகை விலையில் வாங்கலாம்.

மேலும் ஐசிஐசிஐ (ICICI), பேங்க் ஆப் பரோடா (Bank of Baroda) மற்றும் எச்எஸ்பிசி (HSBC) வங்கிகளின் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள், இந்த விற்பனையின் போது தாங்கள் செய்யும் கொள்முதல்களுக்கு 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடியைப் பெறலாம் என்றும் பிளிப்கார்ட் கோட் சேலுக்கான இணைய பக்கம் உறுதிப்படுத்துகிறது.
என்னென்ன ஐபோன் மாடல் என்ன விலைக்கு வாங்க கிடைக்கும்?
ஐபோன் 17 (iPhone 17) - ரூ.82,900 க்கு பதிலாக ரூ.70,990 க்கு வாங்க கிடைக்கும்.
ஐபோன் 17 ப்ரோ (iPhone 17 Pro) - ரூ.1,34,900 க்கு பதிலாக ரூ.1,12,900 க்கு வாங்க கிடைக்கும்.
ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max) - ரூ.1,49,900 க்கு பதிலாக ரூ. 1,27,900 க்கு வாங்க கிடைக்கும்.
ஐபோன் 17இ (iPhone 17e) - ரூ.64,900 க்கு பதிலாக ரூ.60,900 க்கு வாங்க கிடைக்கும்.
ஐபோன் ஏர் (iPhone Air) - ரூ.1,19,900 க்கு பதிலாக ரூ.95,900 க்கு வாங்க கிடைக்கும்.
ஐபோன் 16 (iPhone 16) - ரூ.79,900 க்கு பதிலாக ரூ. 59,900 க்கு வாங்க கிடைக்கும்.
ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus) - ரூ.89,900 க்கு பதிலாக ரூ.73,900 க்கு வாங்க கிடைக்கும்.
ஐபோன் 16இ (iPhone 16e) - ரூ.59,900 க்கு பதிலாக ரூ.55,900 க்கு வாங்க கிடைக்கும்.
ஐபோன் 15 (iPhone 15) - ரூ.79,900 க்கு பதிலாக ரூ.49,900 க்கு வாங்க கிடைக்கும்.
பின் குறிப்பு: பிளிப்கார்ட் வலைத்தளம் ஆனது விற்பனை விலைகளின் விரிவான விவரங்களை இன்னும் தெளிவாக வழங்காததால், மேற்கண்டசலுகை விலைகளில் வங்கி தள்ளுபடிகள் மற்றும் / அல்லது எக்ஸ்சேஞ் போனஸ்கள் (அதாவது பழைய ஸ்மார்ட்போனை மாற்றிக்கொள்ளும்போது கிடைக்கும் கூடுதல் சலுகை) ஆகியவை அடங்கியிருக்கலாம்.
ஐபோன் 17 மாடலின் விரிவான அம்சங்கள்: ஐஓஎஸ் 26 (iOS 26) கொண்டு இயங்கும் ஐபோன் 17 மாடல் ஆனது டூயல் சிம் (நானோ + இசிம்) ஆதரவுடன் வருகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் உடனான பெரிய 6.3-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
மேலும் ஐபோன் 17 மாடலின் டிஸ்பிளேவானது - புதிய ப்ரோமோஷன் (ProMotion) பேனலை ஆதரிக்கிறது. இது ஐபோன் 16 ப்ரோ மாடல்களில் மாடல்களில் இருந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட அம்சமாகும். மேலும் 3000 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், மேம்படுத்தப்பட்ட செராமிக் ஷீல்ட் 2 பாதுகாப்பு மற்றும் ஆஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே ஆகிய அம்சங்களையும் ஆதரிக்கிறது.
தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்கை கொண்டுள்ள ஐபோன் 17 மாடலின் கேமராக்களை பொறுத்தவரை - இது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் எப் /1.6 அபெர்க்ஷர் மற்றும் சென்சார்-ஷிப்ட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடனான 48 மெகாபிக்சல் ஃப்யூஷன் பிரைமரி கேமரா உள்ளது.
இந்த சென்சாரால் 52மிமீ குவிய நீளம் கொண்ட 2எக்ஸ் டெலிஃபோட்டோ கேமராவாகவும் செயல்பட முடியும். இதனுடன் எப்/2.2 அபெர்க்ஷர் மற்றும் மேக்ரோ திறன்களை கொண்ட 48 மெகாபிக்சல் ஃப்யூஷன் அல்ட்ரா-வைட் கேமராவும் உள்ளது. முன்பக்கத்தில், நீங்கள் ஒரு புதிய சென்டர் ஸ்டேஜ் செல்ஃபி கேமராவை பெறுவீர்கள்.
சிப்செட்டை பொறுத்தவரை ஐபோன் 17 மாடல் ஆனது ஏ19 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 16-கோர் நியூரல் எஞ்சினை கொண்டுள்ளது. ஆப்பிளின் கூற்றுப்படி, பவர் எபிஷியன்ட் ஏஐ இன்பெரென்ஸ் (Power-efficient AI inference),


Click it and Unblock the Notifications