மிரட்டி விட்டாப்ல.. முரட்டு ஆஃபரில் 10001mAh பேட்டரி Realme 5G போன்.. 80W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் கோட் சேல் 2026 (Flipkart GOAT Sale 2026) என்கிற சிறப்பு விற்பனையில் ரியல்மி நிறுவனத்தின் பெரிய பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. இதில் 10001mAh பேட்டரி கொண்ட ரியல்மி பி4 பவர் 5ஜி (Realme P4 Power 5G) ஸ்மார்ட்போனும் தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது.
பிளிப்கார்ட் கோட் விற்பனையில் ரியல்மி பி4 பவர் 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலுக்கு 15 சதவீத தள்ளுபடி கிடைத்துள்ளது. இந்த தள்ளுபடியுடன் ரூ.27,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு, எச்எஸ்பிசி கிரெடிட் கார்டு, பேங்க் ஆப் பரோடா கிரெடிட் கார்டுக்கு ரூ.1,500 தள்ளுபடி கிடைக்கிறது.

ரியல்மி பி4 பவர் 5ஜி அம்சங்கள் (Realme P4 Power 5G Specifications): 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.8 இன்ச் (1280 x 2800 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை இந்த ரியல்மி பி4 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 1.5K ரெசொலூஷன், எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் 6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கிடைக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சாருடன் 50 எம்பி ரியர் கேமரா கிடைக்கிறது. கொடுத்துள்ளது. 4K 30எப்பிஎஸ் வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளது.
1080p 3எப்பிஎஸ் ரெக்கார்டிங் மற்றும் சோனி ஐஎம்எக்ஸ்480 (Sony IMX480) சென்சாருடன் 16 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 Ultra 4nm) சிப்செட் மற்றும் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டை இந்த ரியல்மி பி4 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு ரியல்மி யுஐ 7.0 (realme UI 7.0) கொண்ட மாடலாக இருக்கிறது. IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் மட்டுமல்லாமல், IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொடுக்கப்பட்டு இருக்கிறது. பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker) இந்த ரியல்மி பி4 பவர் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) உள்ளது. மேலும், இன்பிராரெட் சென்சாரும் (Infrared Sensor) கிடைக்கிறது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10001mAh பேட்டரி கிடைக்கிறது. மேலும், 27W ரிவர்ஸ் சார்ஜிங் (Reverse Charging) மற்றும் ஃபைபாஸ் சார்ஜிங் (Bypass Charging) கொண்ட மாடலாக இந்த ரியல்மி பி4 பவர் 5ஜி இருக்கிறது.
9.08 எம்எம் தடிமன் & 219 கிராம் எடை உள்ளது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி போக 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடல்களும் கிடைக்கின்றன.
டிரான்ஸ்சில்வர்( TransSilver), டிரான்ஸ்ஆரஞ்ச் (TransOrange) மற்றும் டிரான்ஸ்ப்ளூ (TransBlue) ஆகிய மூன்று கலர்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications