GOAT Sale 2025.. வராத விலைக்கு Nothing போன்கள்.. ரூ.22999-க்கு கிடைக்குது நத்திங் போன் 3ஏ.. எந்தெந்த மாடல்கள்?
பிளிப்கார்ட் கோட் சேல் 2025 (Flipkart GOAT Sale 2025) தொடங்கிவிட்டது. இதில் நத்திங் போன் 3ஏ ப்ரோ (Nothing Phone 3a Pro), நத்திங் போன் 3ஏ (Nothing Phone 3a) மற்றும் சிஎம்எஃப் போன் 2 ப்ரோ (CMF Phone 2 Pro) மாடல்களுக்கு பட்டையை கிளப்பும் தள்ளுபடி கிடைக்கிறது. ஜூலை 12ஆம் தேதி முதல் ஜூலை 17ஆம் தேதி வரையில் இந்த கோட் சேல் நடக்க இருக்கிறது. இந்த நாட்கள் வரையில் மட்டுமே இப்போது கிடைக்கும் டிஸ்கவுண்ட் பொருந்தும்.
நத்திங் போன் 3ஏ ப்ரோ பிளிப்கார்ட் (Nothing Phone 3a Pro Flipkart): இந்த ப்ரோ மாடலின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ. 29,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் கோட் சேலில் ரூ.1,000 விலை குறைப்பு போக ரூ.28,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதுபோக ரூ.2,000 பேங்க் டிஸ்கவண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.26,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

இந்த போனில் 6.77 இன்ச் (1080 x 2392 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 4என்எம் சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் வருகிறது. 50 எம்பி மெடின் கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 50 எம்பி டெலிபோட்டோ கேமரா உள்ளது. 50W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது.
நத்திங் போன் 3ஏ பிளிப்கார்ட் (Nothing Phone 3a Flipkart): இந்த நத்திங் போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.24,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் கோட் சேலில் ஆர்டர் செய்தால், ரூ.2,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.22,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். எச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கு இந்த டிஸ்கவுண்ட் வருகிறது.
இந்த போனிலும் 6.77 இன்ச் (1080 x 2392 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே மற்றும் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 4என்எம் சிப்செட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் மற்றும் 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி டெலிஸ்கோப் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. அதேபோல 50W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது.

சிஎம்எஃப் போன் 2 ப்ரோ பிளிப்கார்ட் (CMF Phone 2 Pro Flipkart): இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.18,999ஆக இருக்கிறது. பிளிப்கார்ட் கோட் சேல் விற்பனையில் ரூ.2,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.16,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. இதற்கும் எச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுகள் பயன்படுத்த வேண்டும்.
இந்த சிஎம்எஃப் போனில் 6.77 இன்ச் (1080 x 2392 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 ப்ரோ சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு + 50 எம்பி டெலிபோட்டோ கிடைக்கிறது. 33W ஃபாஸ்ட் சார்ஜங் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








