Flipkart GOAT Sale 2024: விட்றாதீங்க.. கிட்டத்தட்ட பாதி விலைக்கு கிடைக்கும் Nothing Phone.. என்ன மாடல்?
சொல்லாமல் கொள்ளாமல்.. அமேசான் ப்ரைம் டே சேலிற்கு (Amazon Prime Day Sale) போட்டியாக திடீரென ஆரம்பம் ஆனாலும் கூட பிளிப்கார்ட் கோட் சேல் (Flipkart GOAT Sale) ஆனது பட்டையை கிளப்புகிறது என்றே கூற வேண்டும். ஜூலை 25 ஆம் தேதி வரை நடக்கவுள்ள பிளிப்கார்ட் கோட் சேலில் பல பிரபலமான ஸ்மார்ட்போன்கள் மீது நம்ப முடியாத அளவிற்கு விலை குறைப்புகள், நேரடி தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவைகளில் நத்திங் நிறுவனத்தின் இரண்டாவது ஸ்மாட்போன் ஆன நத்திங் போன் 2 (Nothing Phone 2) மாடலும் அடங்கும்.
நத்திங் போன் 2 மீது அப்படி என்ன சலுகைகள் கிடைக்கிறது? பிளிப்கார்ட் கோட் சேலில் நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் ஆனது வெறும் ரூ.29,999 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் கடந்த ஆண்டு இந்தியாவில் ரூ.44,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

பின்னர் அதிகாரப்பூர்வ விலைகுறைப்புகளை பெற்று ரூ.33,999 க்கு விற்கப்பட்டது. தற்போது பிளிப்கார்ட் கோட் சேலின் ஒரு பகுதியாக நத்திங் போன் 2 மாடல் ஆனது.. அசல் அறிமுக விலையில் இருந்து ரூ.15,000 விலை குறைப்பை பெற்று ரூ.29,999 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த விலை எந்த விதமான வங்கி அல்லது எக்ஸ்சேன்ஜ் சலுகைகளையும் உள்ளடக்காத நேரடி தள்ளுபடி விலையாகும்.
நத்திங் போன் 2-வின் முக்கிய அம்சங்கள்: இது டூயல் சிம் (நானோ) ஆதரவுடன் வரும் நத்திங் போன் 2 ஆனது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 2.0 கொண்டு இயங்குகிறது. இது 120ஹெர்ட்ஸ் வரையிலான அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் ஃபுல்-எச்டி எல்டிபிஓ ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
குவால்காம் 4என்எம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட்டை பேக் செய்கிறது. கேமராக்களை பொறுத்தவரை, இதில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 1/1.56-இன்ச் சோனி IMX890 சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (EIS) உடனான 50 மெகாபிக்சல் மெயின் + 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா உள்ளது.
முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் கேமரா மற்றும் பேக் பேனலில் எல்இடி லைட்ஸ் உடனான கிளிஃப் இன்டர்ஃபேஸ் உடன் வரும் நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் ஆனது 45W வயர்டு சார்ஜிங் மற்றும் 5W கியூஐ வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4700எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது.
நம்பி வாங்கலாமா? இது உண்மையிலேயே மிகவும் க்ளீன் ஆன சாஃப்ட்வேரை கொண்டுள்ளது; கூடவே அட்டகாசமான மற்றும் தனித்துவமான டிசனையும் கொண்டுள்ளது. மேலும் இது திடமான செயல்திறனை வழங்கும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்பை பேக் செய்கிறது. இது நல்ல பாஸ்ட் சார்ஜிங்கை வழங்குகிறது; கூடவே ஒரு நாள் முழுவதும் நீடிக்கும் பேட்டரி லைஃப்பையும் உறுதி செய்கிறது.
இருந்தாலும் கூட நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப் ஆனது போட்டோ மற்றும் வீடியோ ஆர்வலர்களை கவரும்படி இல்லை. இது விலைக்கு ஏற்ற கேமராக்களை கொண்டிருந்தாலும் கூட, இதே செக்மென்ட்டில் கிடைக்கும் மற்ற போன்கள் வழங்கும் அவுட்புக்களை இது வழங்கவில்லை. எனவே கேமரா ஆர்வலர்கள் இதை தவிர்க்கலாம்; மற்றபடி இது ரூ.29,999-க்கு வொர்த் ஆன ஸ்மார்ட்போன் தான்!


Click it and Unblock the Notifications








