Home
Mobile

Flipkart GOAT Sale: கிரெடிட் கார்டுலாம் வேணாம்.. யாரு ஆர்டர் போட்டாலும் இந்த iPhone மீது ரூ.14,401 DISCOUNT!

ஜூலை 25 ஆம் தேதியோடு முடிவடையும் பிளிப்கார்ட் கோட் சேலில் (Flipkart GOAT Sale 2024) ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மீது அறிவிக்கப்பட்டுள்ள எந்த சலுகையும் உங்களை ஈர்க்கவில்லை என்றால்.. நீங்கள் ஐஓஎஸ்-க்கு அப்கிரேட் ஆகும் மனநிலையில் இருக்கிறீர்கள் என்றால்.. இதுவே அதற்கான சரியான நேரம். பிளிப்கார்ட் கோட் சேலில், பல ஐபோன் மாடல்கள் மீது அபராமான நேரடி தள்ளுபடிகள் அணுக கிடைக்கிறது. அவைகளில் எந்த விதமான கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு அல்லது வங்கி சலுகையும் இல்லாமலேயே.. ஒரு குறிப்பிட்ட ஐபோன் மாடல் மீது ரூ.14,401 நேரடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

அதென்ன மாடல்? நாம் இங்கே பேசுவது ஆப்பிள் ஐபோன் 15 (Apple iPhone 15) மாடலை பற்றித்தான். கடந்த 2023 செப்டம்பர் மாதத்தில் அறிமுகமான ஐபோன் 15 தற்போது பிளிப்கார்ட் வழியாக மிக குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது. ஐபோன் 15 மாடலின் அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? வேறு என்னென்ன ஐபோன் மாடல்கள் மீது டிஸ்கவுண்ட் கிடைக்கிறது? இதோ விவரங்கள்:

Flipkart GOAT Sale 2024:  இந்த iPhone மீது ரூ.14,401 டிஸ்கவுண்ட்!

ஐபோன் 15 மாடலின் பேஸிக் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் அசல் விலை ரூ.79,900 ஆகும். இதே மாடல் 256ஜிபி உடன் ரூ.89,900 க்கும், 512ஜிபி உடன் ரூ.1,09,900 க்கும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. தற்போது பிளிப்கார்ட்டில் ஐபோன் 15-ன் 128ஜிபி ஆப்ஷன் ரூ.65,499 க்கு வாங்க கிடைக்கிறது. முன்னரே குறிப்பிட்டபடி இது வங்கி சலுகைகளுக்கு பிறகான ஆபர் விலை அல்ல; இது நேரடியாக ரூ.14,401 விலைகுறைப்பை பெற்றுள்ள டிஸ்கவுண்ட் விலையாகும்.

கூடுதலாக பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கார்டை பயன்படுத்தினால் அல்லது உங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஞ் செய்தால், ஐபோன் 15 மாடலின் விலையை இன்னும் குறைக்க முடியும். எக்ஸ்சேன்ஜ் வேல்யூவானது உங்கள் பழைய ஸ்மார்ட்போனின் நிலையை பொறுத்தது வேறுபடும். கடைசியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டு அல்லாத இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு கூடுதலாக ரூ.1,000 தள்ளுபடியும் கிடைக்கிறது.

ஐபோன் 15-ன் முக்கிய அம்சங்கள்: இது 6.1 இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளதுஇந்த மாடல் ஐபோன் 14 மற்றும் முந்தைய மாடல்களின் வடிவமைப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது, ஆனால் கடந்த ஆண்டு ஐபோன் 14 ப்ரோ மாடல்களில் இருந்து பிரபலமான அம்சமான டைனமிக் ஐலேண்ட் நாட்ச்சை பேக் செய்கிறது. கேமராவைப் பொறுத்தவரை, ஐபோன் 15 ஆனது 48 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சாரை பெற்று குறிப்பிடத்தக்க மேம்படுத்தலை கொண்டுள்ளது.

இதன் பேட்டரி லைஃப் ஆரம்பத்தில் வாக்குறுதியளிக்கப்பட்டதை விட இரட்டிப்பாக இருக்கும் என்று ஆப்பிள் கூறுகிறது. ஐபோன் 15 ஆனது 80 சதவீத பேட்டரி ஆரோக்கியத்தை பராமரிக்கும் போது 500 சார்ஜிங் சுழற்சிகளை தாங்கும் என்று கூறப்பட்டது, ஆனால் ஆப்பிள் இப்போது 1000 சுழற்சிகளை தாங்கும் என்று கூறுகிறது.

ஐபோன் 15 ஆனது ஆப்பிளின் ஏ16 பயோனிக் சிப் மூலம் இயக்கப்படுகிறது, இது கடந்த ஆண்டு வெளியான ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸில் பயன்படுத்தப்பட்ட ஏ15 பயோனிக் சிப்செட்டிலிருந்து மேம்படுத்தப்பட்ட சிப்செட் ஆகும். கடந்த ஆண்டு வெளியான ப்ரோ மாடல்களில் ஏ16 சிப் தான் இடம்பெற்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

பிளிப்கார்ட் கோட் சேலில் வேறு என்னென்ன ஐபோன்கள் மீது என்னென்ன ஆபர் கிடைக்கிறது? ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் மாடல் ஆனது ரூ.79,900 க்கு பதிலாக ரூ.56,499 க்கு வாங்க கிடைக்கிறது. ஆப்பிள் ஐபோன் 15 பிளஸ் மாடல் ஆனது ரூ.89,900 க்கு பதிலாக ரூ.74,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஆப்பிள் ஐபோன் 12 மாடல் ஆனது ரூ.49,900 க்கு பதிலாக ரூ.38,499 க்கு வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart GOAT Sale 2024 How to Buy Apple iPhone 15 For Just Rs 65499 Instead of Rs 79900
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X