Flipkart GOAT Sale-ல் ஆர்டர் பிச்சுக்குது! ரூ.5799 போதும்! 8 POCO போன்கள் மீது எப்போதும் இல்லாத விலை குறைப்பு!
அமேசானின் ப்ரைம் டே விற்பனைக்கு (Amazon Prime Day Sale) போட்டியாக பிளிப்கார்ட் வலைத்தளமானது கோட் சேல் (Flipkart GOAT Sale) என்கிற சிறப்பு விற்பனையை நடத்துகிறது. அமேசானின் ப்ரைம் டே சேல் ஆனது ஜூலை 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் மட்டுமே நடக்கவுள்ள நிலையில் பிளிப்கார்ட் தனது கோட் சேல்-ஐ ஜூலை 25 ஆம் தேதி வரை நடத்தவுள்ளது. அமேசானுக்கு போட்டியாக பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் மீது அபரா சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் கூட, போக்கோ நிறுவனத்தின் போன்கள் மீது முன்னெப்போதும் இல்லாத அளவிலான விலைக்குறைப்புகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
பிளிப்கார்ட் கோட் சேலின் போது 4ஜி மற்றும் 5ஜி வேரியண்ட்கள் உட்பட மொத்தம் போக்கோ ஸ்மார்ட்போன்கள் மீது விலை குறைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. என்னென்ன மாடல்கள் மீது விலை குறைப்பு கிடைக்கிறது? அவைகளின் பழைய விலை என்ன? விலை குறைப்பிற்கு பிறகான புதிய ஆபர் விலை என்ன? இதோ விவரங்கள்:

1. போக்கோ எப்6 (POCO F6): இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.29,999-க்கு பதிலாக ரூ.3,250 விலைக்குறைப்பை பெற்று ரூ.26,749-க்கு வாங்க கிடைக்கும். இதேபோல 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.31,999-க்கு பதிலாக ரூ.3,250 விலைக்குறைப்பை பெற்று ரூ.28,749-க்கு வாங்க கிடைக்கும். கடைசியாக உள்ள 12ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷனும் ரூ.3,250 விலைக்குறைப்பை பெற்று ரூ.30,749-க்கு வாங்க கிடைக்கும்.
2.போக்கோ எக்ஸ்6 ப்ரோ (POCO X6 Pro): இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.26,999-க்கு பதிலாக ரூ.4,000 விலைக்குறைப்பை பெற்று ரூ.22,999-க்கு வாங்க கிடைக்கும். இதேபோல 12ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ரூ.28,999-க்கு பதிலாக ரூ.4,250 விலைக்குறைப்பை பெற்று ரூ.24,749-க்கு வாங்க கிடைக்கும்.
3. போக்கோ எக்ஸ்6 (POCO X6): இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.21,999-க்கு பதிலாக ரூ.4,250 விலைக்குறைப்பை பெற்று ரூ.17,749-க்கு வாங்க கிடைக்கும். இதேபோல 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.23,999-க்கு பதிலாக ரூ.4,000 விலைக்குறைப்பை பெற்று ரூ.19,999-க்கு வாங்க கிடைக்கும். கடைசியாக உள்ள 12ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷனும் ரூ.4,000 விலைக்குறைப்பை பெற்று ரூ.20,999-க்கு வாங்க கிடைக்கும்.
4. போக்கோ எக்ஸ்6 நியோ (POCO X6 Neo): இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.15,999-க்கு பதிலாக ரூ.2,000 விலைக்குறைப்பை பெற்று ரூ.13,999-க்கு வாங்க கிடைக்கும். இதேபோல 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.17,999-க்கு பதிலாக ரூ.3,000 விலைக்குறைப்பை பெற்று ரூ.14,999-க்கு வாங்க கிடைக்கும்.
5. போக்கோ எம்6 ப்ரோ 5ஜி (POCO M6 Pro 5G): இந்த ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.11,999-க்கு பதிலாக ரூ.3,000 விலைக்குறைப்பை பெற்று ரூ.8,999-க்கு வாங்க கிடைக்கும். இதேபோல 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.12,999-க்கு பதிலாக ரூ.3,000 விலைக்குறைப்பை பெற்று ரூ.9,999-க்கு வாங்க கிடைக்கும்
6. போக்கோ எம்6 5ஜி (POCO M6 5G): இந்த ஸ்மார்ட்போனின் ஏர்டெல் 4ஜிபி ரேம் + 128ஜிபி வேரியண்ட் ரூ.10,499-க்கு பதிலாக ரூ.2,250 விலைக்குறைப்பை பெற்று ரூ.8,249-க்கு வாங்க கிடைக்கும். இதேபோல 4ஜிபி ரேம் + 64ஜிபி ஆப்ஷன் ரூ.8,249 க்கும், 6ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.9,249 க்கும் மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.10,249 க்கும் வாங்க கிடைக்கும்.
7. போக்கோ சி65 (POCO C65): இந்த ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.8,499-க்கு பதிலாக ரூ.1,700 விலைக்குறைப்பை பெற்று ரூ.6,799-க்கு வாங்க கிடைக்கும். இதேபோல 6ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.9,499-க்கு பதிலாக ரூ.2,200 விலைக்குறைப்பை பெற்று ரூ.7,299-க்கு வாங்க கிடைக்கும். கடைசியாக உள்ள 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.2,500 விலைக்குறைப்பை பெற்று ரூ.8,499-க்கு வாங்க கிடைக்கும்
8. போக்கோ சி61 (POCO C61): இந்த ஸ்மார்ட்போனின் ஏர்டெல் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஆப்ஷன் ரூ.7,499-க்கு பதிலாக ரூ.1,700 விலைக்குறைப்பை பெற்று ரூ.5,799-க்கு வாங்க கிடைக்கும். இதேபோல 4ஜிபி ரேம் + 64ஜிபி ஆப்ஷன் ரூ.8,499-க்கு பதிலாக ரூ.2,200 விலைக்குறைப்பை பெற்று ரூ.6,299-க்கு வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








