Home
Mobile

கூவி, கூவி விற்கும் பிளிப்கார்ட்.. 50MP கேமரா.. 6000mAh பேட்டரி.. ஆஃபரில் Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் Flipkart GOAT sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனை ஆனது இன்று முதல் வரும் ஜூலை 25 வரை நடைபெறும். இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் அசத்தலான ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளன. அதன்படி பிரபலமான சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி (SAMSUNG Galaxy F15 5G) போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி ஸ்மார்ட்போனுக்கு தற்போத 18 சதவீதம் தள்ளுபடி வழங்கி ரூ.12,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும். எனவே இந்த போனை ரூ.11,999 விலையில் வாங்க முடியும்.

கூவி, கூவி விற்கும் பிளிப்கார்ட்..ஆஃபரில் Samsung 5ஜி போன்..

சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F15 5G Specifications): 6.5-இன்ச் அளவிலான சூப்பர் அமோஎல்இடி (sAMOLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது அசத்தலான சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 2340 x 1080 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.

தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் சிப்செட் (Dimensity 6100+ Chipset) கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போன். எனவே இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். சுருக்கமாக கூறவேண்டும் என்றால் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் இந்த டைமன்சிட்டி சிப்செட்

சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 13 5ஜி பேண்ட்களுக்கான ஆதரவுடன் (13 5G Bands Support) வருகிறது. அதேபோல் ஆண்ட்ராய்டு 14 மூலம் போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போன் 4 ஆண்டுகளுக்கான ஆண்ட்ராய்டு அப்டேட்கள் (Android Updates For 4 Years)மற்றும் 5 ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட்களை (Security Updates For 5 Years) பெறும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

50எம்பி மெயின் கேமரா + 5எம்பி கேமரா + 2 எம்பி கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா (Triple Rear Camera Setup)செட்டப் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு அம்சங்கள் இதில் உள்ளன.

கூவி, கூவி விற்கும் பிளிப்கார்ட்..ஆஃபரில் Samsung 5ஜி போன்..

இந்த சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போன் 6000mAh பேட்டரியை பேக் செய்கிறது. எனவே சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போனின் எடை 217 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart GOAT sale: 15 percent discount on Samsung Galaxy F15 5G:check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X