பொளக்குது விற்பனை.. ரூ.8,199-க்கு SAMSUNG 5ஜி போன்.. 5000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 25W சார்ஜிங்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் ஃப்ரீடம் சேல் 2025 (Freedom Sale 2025) நடக்கிறது. இந்த சேலில் சாம்சங் 5ஜி மாடல்களுக்கு பட்டையை கிளப்பும் தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. இதில் 50 எம்பி கேமரா, 5000mAh பேட்டரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்6 5ஜி (Samsung Galaxy F06 5G) போனுக்கும் தள்ளுபடி கிடைக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் கொண்ட இந்த சாம்சங் கேலக்ஸி எப்6 5ஜி போனின் விலை, பீச்சர் விவரங்களை இப்போது பார்க்கலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் நடக்கும் இந்த சேல் ஆகஸ்ட் 8ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. இதில் ரூ.8,199 விலைக்கு சாம்சங் கேலக்ஸி எப்6 5ஜி போன் வாங்க கிடைக்கிறது. இதுபோக குறிப்பிட்ட பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுக்கு ரூ.410 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. இந்த போனின் மார்கெட் விலையை பார்க்கையில் ரூ.9,499ஆக இருக்கிறது.

மேலும், ரூ.8,350 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையை பெற்று கொள்ளலாம். 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு இந்த தள்ளுபடி கிடைக்கிறது. அதேபோல 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.10,999ஆக இருக்கிறது. இந்த மாடலுக்கும் பிளிப்கார்ட் ஃப்ரீடம் சேலில் ரூ.9,999 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கிறது.
ஆகவே, ரூ.1,000-க்கு மேல் விலை குறைப்பில் வாங்கி கொள்ள முடிகிறது. இந்த 6 ஜிபி ரேம் மாடலுக்கும டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு தள்ளுபடி கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எப்6 5ஜி போனில் பஹாமா ப்ளூ (Bahama Blue) மற்றும் லிட் வயலெட் (Lit Violet) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. இப்போது, மற்ற பீச்சர்களை பார்த்துவிடலாம்.
சாம்சங் கேலக்ஸி எப்6 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F06 5G Specifications): இந்த கேலக்ஸி போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் மற்றும் ஒன் யுஐ 7 (One UI 7) கிடைக்கிறது. பட்ஜெட் மாடலாக இருப்பதால், அமோலெட் டிஸ்பிளே கொடுக்கப்படவில்லை.
இருப்பினும், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.7 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ரியர் கேமராவில் வழக்கம்போல 50 எம்பி மெயின் சென்சார் கிடைக்கிறது. இதற்கு 2 எம்பி டெப்த் சென்சார் சப்போர்ட் கிடைக்கிறது.
இந்த சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி போனுக்கு 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டு இருக்கிறது. 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மட்டுமல்லாமல், 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் சப்போர்ட் கொடுத்து இருக்கிறது. இன்-டிஸ்பிளே சென்சார் கிடையாது, சைடு-ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-fingerprint Sensor) கொடுக்கப்படுள்ளது.
இந்த கம்மி பட்ஜெட்டுக்கு ஏற்ப 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி பேக் செய்யப்பட்டு இருக்கிறது. டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SAயலேோ) மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டி சப்போர்ட் இந்த சாம்சங் போனில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








