பிளிப்கார்ட் அதிரடி ஆஃபர்.. 6000mAh பேட்டரி.. 32MP கேமரா.. குறைந்த விலையில் Oppo 5ஜி போன்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் Flipkart Freedom Sale 2025 எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் ஒப்போ ஏ5எக்ஸ் 5ஜி (OPPO A5x 5G) ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இப்போது இந்த போனின் புதிய விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
அதாவது தற்போது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ5எக்ஸ் 5ஜி மாடலுக்கு 23 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.12,980 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வ செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷபேக் சலுகையும் உள்ளது. எனவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

ஓப்போ ஏ5எக்ஸ் 5ஜி அம்சங்கள் (OPPO A5x 5G Specifications): தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் உடன் ஒப்போ ஏ5எக்ஸ் 5ஜி போன் வெளிவந்துள்ளது.அதேபோல் கலர்ஓஎஸ் 15 (Color OS 15) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
ஓப்போ ஏ5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் IP65 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போனுக்கு MIL-STD-810H சர்டிபிகேஷன் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.
குறிப்பாக 6.67 எச்டி பிளஸ் எல்சிடி (LCD) டிஸ்பிளே வசதியுடன் இந்த ஒப்போ போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1604 x 720 பிக்சல்கள், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 264 பிபிஐ பிக்சல் டென்சிட்டி 240ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட், 16.7 மில்லியன் கலர் டெப்த் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.
இந்த ஓப்போ ஏ5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 32 எம்பி வைடு ஆங்கிள் மெயின் கேமரா + ஐஆர் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவந்துள்ளது. எனேவ இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா இதில் உள்ளது.
ஏஐ எரைடர் 2.0 (AI Eraser 2.0), ஏஐ கிளாரிட்டி என்ஹான்சர் (AI Clarity Enhancer) போன்ற பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், பாட்டம் ஃபயரிங் ஸ்பீக்கர்கள், 4ஜிபி ரேம், 128ஜிபி மெமரி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன. மிட்நைட் ப்ளூ (Midnight Blue), லேசர் ஒயிட் (Laser White) நிறங்களில் இந்த ஒப்போ ஸ்மார்ட்போனை வாங்க முடியும்
அதுவும் 6000mAh பேட்டரி உடன் ஓப்போ ஏ5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜி வசதியும் உள்ளது.


Click it and Unblock the Notifications








