Home
Mobile

பிளிப்கார்ட் சேல் 2025.. கிடுகிடுவென குறைந்த Motorola 5ஜி போன் விலை.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் Flipkart Freedom Sale 2025 எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்கள் கம்மி விலையில் வாங்க கிடைக்கின்றன. அதேபோல் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோரோலா எட்ஜ் 60 ஃபியூஷன் (Motorola Edge 60 FUSION) மாடலுக்கு இந்த சிறப்பு விற்பனையில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

அதாவது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் வங்கி சலுகைகளுடன் சேர்த்து மோட்டோரோலா எட்ஜ் 60 ஃபியூஷன் மாடலை ரூ.20,999 விலையில் வாங்கிவிட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பட்ஜெட் விலையில் இந்த போன் தற்போது கிடைப்பதால் நம்பி வாங்கலாம். இப்போது இந்த போனின் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

பிளிப்கார்ட் சேல்.. கிடுகிடுவென குறைந்த Motorola 5ஜி போன் விலை..

மோட்டோரோலா எட்ஜ் 60 ஃபியூஷன் அம்சங்கள் (Motorola Edge 60 FUSION Specifications): 50 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா ஆகிய ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 60 ஃபியூஷன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

தரமான ஆக்டா கோர் மமீடியாடெக் டைமன்சிட்டி 7400 4என்எம்(Octa Core MediaTek Dimensity 7400 4nm) சிப்செட் வசதியுடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஃபியூஷன் வெளிவந்தது மேலும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

6.7 இன்ச் குவாட் கர்வ்ட் பிஓஎல்இடி (Quad Cueved pOLED) டிஸ்பிளே டிஸ்பிளே வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் 2712 x 1220 பிக்சல்கள், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட், 446 பிபிஐ பிக்சல் டென்சிட்டி உள்ளிட்ட பல அம்சங்கள் இதன் டிஸ்பிளேவில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை கொடுக்கும்.

5500mAh பேட்டரி வசதியுடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஃபியூஷன் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் கொடுக்கும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

பிளிப்கார்ட் சேல்.. கிடுகிடுவென குறைந்த Motorola 5ஜி போன் விலை..

டால்பி அட்மாஸ் ஆடியோவுடன் கூடிய ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் யூ.எஸ்.பி-சி ஆடியோ, ஹைப்ரிட் டூயல் சிம், 5 ஜி, வைஃபை 6, புளூடூத் 5.4 , என்.எஃப்.சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன.

குறிப்பாக IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது. பின்பு MIL-STD-810H இராணுவ தர சான்றிதழ் பெற்றுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 60 ஃபியூஷன் ஸ்மார்ட்போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart Freedom Sale 2025: Motorola Edge 60 Fusion available at discounted price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X