Home
Mobile

ஆர்டர் அள்ள போகுது.. பிளிப்கார்ட் சேல் 2025.. ஆஃபரில் HMD 5ஜி போன்.. 64எம்பி கேமரா.. எந்த மாடல்?

தற்போது பிளிப்கார்ட் தளத்தில் Flipkart Freedom Sale 2025 எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எச்எம்டி க்ரெஸ்ட் மேக்ஸ் 5ஜி (HMD Crest Max 5G) ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் எச்எம்டி க்ரெஸ்ட் மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 46 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்டர் அள்ள போகுது.. பிளிப்கார்ட் சேல் 2025.. ஆஃபரில் HMD 5ஜி போன்.

எச்எம்டி க்ரெஸ்ட் மேக்ஸ் 5ஜி அம்சங்கள் (HMD Crest Max 5G specifications): சக்திவாய்ந்த யுனிசாக் டி760 5ஜி ஆக்டா-கோர் 6என்எம்சிப்செட் (Unisoc T760 5G octa core 6 nm) உடன் இந்த எச்எம்டி போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

அதேபோல் 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஓஎல்இடி டிஸ்பிளே (OLED display)டிஸ்பிளே உடன் இந்த எச்எம்டி க்ரெஸ்ட் மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2400 x 1080 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ (20:9 aspect ratio) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.

குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த எச்எம்டி க்ரெஸ்ட் மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த எச்எம்டி க்ரெஸ்ட் மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 64எம்பி ஏஐ சோனி (Sony) சென்சார் + 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

மேலும் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac), புளூடூத் 5.0 (Bluetooth 5.0), ஜிபிஎஸ் (GPS), யுஸ்பி டைப்-சி (USB Type-C) போர்ட், குளோனாஸ் (GLONASS)உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

இதுதவிர 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 5000mAh பேட்டரி உடன் இந்த எச்எம்டி க்ரெஸ்ட் மேக்3ஸ் 5ஜி போன். சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner), 3.5எம்எம் ஆடியோ ஜாக் (3.5mm audio jack) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart Freedom Sale 2025: hmd Crest Max 5G available at discounted price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X