இறுதி கட்டத்தில் அள்ளி வீசும் பிளிப்கார்ட்.. மலிவு விலையில் Poco 5G போன்.. எந்த மாடல்? என்ன விலை?
பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்தில் பிளாக்ஷிப் சேல் (Flagship Sale) என்கிற சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனை நாளை (ஆகஸ்ட் 15) நிறைவுபெறும். இந்நிலையில் கடைசி கட்டத்தில் பல முன்னணி நிறுவனங்களின் போன்களுக்கு தள்ளுபடி வழங்கி உள்ளது பிளிப்கார்ட். அதுவும் 5ஜி போன்கள் மிகவும் கம்மி விலையில் கிடைக்கின்றன. அதன்படி தற்போது அசத்தலான போக்கோ எம்6 5ஜி (POCO M6 5G) போனுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 29 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.8,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. எனவே இந்த போக்கோ 5ஜி போனை மிகவும் கம்மி விலையில் வாங்கலாம்.

போக்கோ எம்6 5ஜி அம்சங்கள் (POCO M6 5G specifications): 6.74-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த போக்கோ எம்6 5ஜி போன் வெளிவந்தது. 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.
இந்த போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போன்50எம்பி ஏஐ டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது எனவே இதன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
குறிப்பாக சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்(Side-mounted Fingerprint Sensor), 3.5எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ, டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த போக்கோ எம்6 5ஜி போன் வெளிவந்துள்ளது.
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5000எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த போக்கோ எம்6 5ஜி வெளிவந்துள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது. எனவே இதன் பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
அதேபோல் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த 5ஜி போன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








