இறுதி நேரத்தில் இறங்கி அடிக்கும் Flipkart.. ஆஃபரில் அட்டகாசமான 5ஜி போன்கள்.. இதோ பட்டியல்..
பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்தில் பிளாக்ஷிப் சேல் (Flagship Sale) என்கிற சிறப்பு விற்பனை நடக்கிறது. இந்த சிறப்பு விற்பனை இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும். அதாவது ஆகஸ்ட் 15-ம் தேதி வரை இந்த சிறப்பு விற்பனை நடைபெறும். குறிப்பாக இன்னும் சில தினங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அசத்தலான 5ஜி போன்களுக்கு அதிகமான தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டியுள்ளது பிளிப்கார்ட் நிறுவனம்.
மோட்டோரோலா ஜி64 5ஜி (Motorola g64 5G) ஸ்மார்ட்போன் மாடலுக்கு 22 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.13,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே ரூ.12,999 இருந்தால் இந்த போனை வாங்கிவிட முடியும். 6000எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி கேமரா, 6.5-இன்ச் டிஸ்பிளே உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

விவோ டி3 லைட் 5ஜி (vivo T3 Lite 5G) போனுக்கு 27 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.10,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. 50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, டைமன்சிட்டி 6300 சிப்நெடசட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த விவோ போன்.
ரியல்மி 12எக்ஸ் 5ஜி (realme 12x 5G) போனுக்கு 27 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் கிடைக்கும். மேலும் 50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, டைமன்சிட்டி சிப்செட் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி (SAMSUNG Galaxy F34 5G) போனுக்கு 42 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. குறிப்பாக 6000எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி கேமரா, 6.5-இன்ச் டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
ரெட்மி 13 5ஜி (REDMI 13 5G) ஸ்மார்ட்போனுக்கு 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.13,488 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. எனவே ரூ.12,488 விலையில் இந்த போனை வாங்க முடியும். ஸ்னாப்டிராகன் சிப்செட், 108எம்பி கேமரா, 6.79-இன்ச் டிஸ்பிளே உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் 5ஜி (Infinix Note 40X 5G) போனுக்கு 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.750 தள்ளபடியும் உள்ளது. எனவே ரூ.14249 விலையில் இந்த போனை வாங்க முடியும்.
போக்கோ எம்6 5ஜி (POCO M6 5G) போனுக்கு 29 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.8,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பினபு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. 50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, 6.74-இன்ச் டிஸ்பிளே உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் உள்ளன.


Click it and Unblock the Notifications








