Home
Mobile

சூடுபிடிக்கும் Flipkart Sale.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. ஆஃபரில் தரமான Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்தில் பிளாக்ஷிப் சேல் (Flagship Sale) என்கிற சிறப்பு விற்பனை நடக்கிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மிகவும் அதிகம் எதிர்பார்த்த விவோ டி3எக்ஸ 5ஜி (vivo T3x 5G) போனுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இப்போது இந்த விவோ போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் தற்போது விவோ டி3எக்ஸ் 5ஜி போனுக்கு 22 சதவீதம் வழங்கப்பட்டு ரூ.13,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த விவோ இப்போது ரூ.11999 இருந்தால் வாங்கிவிட முடியும்.

சூடுபிடிக்கும் Flipkart Sale.. ஆஃபரில் தரமான Vivo 5ஜி போன்..

விவோ டி3எக்ஸ் 5ஜி அம்சங்கள் (vivo T3x 5G Specifications): ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 (Snapdragon 6 Gen 1) சிப்செட் வசதியுடன் இந்த விவோ டி3எக்ஸ் 5ஜி போன் வெளிவந்தது. மேலும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட ஃபன்டச் ஓஎஸ் 14 (FuntouchOS 14) மூலம் இயங்குகிறது இந்த போன்.

6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் (Full HD+) டிஸ்பிளே வசதியுடன் விவோ டி3எக்ஸ் 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்(120Hz refresh rate), 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (1000 nits peak brightness) மற்றும் பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. அதேபோல் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த போன்.

எப்/1.8 அபெக்ஷர் கொண்ட 50 மெகாபிக்சல் மெயின் சென்சார் + எப்/2.4 அபெக்ஷர் கொண்ட 2 மெகாபிக்சல் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த விவோ போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த விவோ டி3எக்ஸ் 5ஜி மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. குறிப்பாக தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி64 (IP64) ரேட்டிங் கொண்டுள்ளது இந்த விவோ போன்.

சூடுபிடிக்கும் Flipkart Sale.. ஆஃபரில் தரமான Vivo 5ஜி போன்..

விவோ டி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரியுடன் (6000mAh battery)பேட்டரி வசதி உள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (44W fast charging) வசதியும் உள்ளது. சில நிமிடங்களில் இந்த போனை சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி (5G), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 6 802.11 ஏஎக்ஸ் (Wi-Fi 6 802.11 ax), புளூடூத் 5.1 (Bluetooth 5.1), ஜிபிஎஸ் (GPS), யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. பின்பு சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) இதில் உள்ளது.

Best Mobiles in India

English summary
Flipkart Flagship Sale 2024: Vivo T3X 5G Phone Gets 22 Percent Discount
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X