அள்ளி கொடுக்கும் பிளிப்கார்ட்.. 50எம்பி கேமரா.. 6000mAh பேடடரி.. ஆஃபரில் Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மிகவும் பிரபலமான சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட தள்ளுபடி மற்றும் இதன் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
அதன்படி பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்தில் பிளாக்ஷிப் சேல் (Flagship Sale) என்கிற சிறப்பு விற்பனையில் சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போனுக்கு 18 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த அட்டகாசமான போனை வெறும் ரூ.11,999 விலையில் வாங்கிவிட முடியும்.

சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F15 5G Specifications): 6.5-இன்ச் சூப்பர் அமோஎல்இடி (sAMOLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2340 x 1080 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. எனவே இந்த போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் சிப்செட் (Dimensity 6100+ Chipset) கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போன். எனவே இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
குறிப்பாக சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போன் ஆனது 13 5ஜி பேண்ட்களுக்கான ஆதரவுடன் (13 5G Bands Support) வருகிறது. அதேபோல் ஆண்ட்ராய்டு 14 மூலம் போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போன் 4 ஆண்டுகளுக்கான ஆண்ட்ராய்டு அப்டேட்கள் (Android Updates For 4 Years)மற்றும் 5 ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட்களை (Security Updates For 5 Years) பெறும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போன் 50எம்பி மெயின் கேமரா + 5எம்பி கேமரா + 2 எம்பி கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா (Triple Rear Camera Setup) அமைப்புடன் இந்த அட்டகாசமான வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு அம்சங்கள் இதில் உள்ளன.

6000mAh பேட்டரியை பேக் செய்கிறது கேலக்ஸி எப்15 5ஜி போன் . எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications








