இன்னைக்கு ஆர்டர் அள்ளுமே.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. ஆஃபரில் Motorola 5ஜி போன்.. எந்த மாடல்?
தற்போது பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்தில் பிளாக்ஷிப் சேல் (Flagship Sale) என்கிற சிறப்பு விற்பனை நடக்கிறது. இந்த சிறப்பு விற்பனை வரும் ஆகஸ்ட் 15 வரை மட்டுமே இருக்கும். குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் போன்கள் கம்மி விலையில் வாங்க கிடைக்கிறது. அதன்படி மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோரோலா ஜி84 5ஜி (Motorola g84 5G) போனுக்கு தள்ளுபடி வழங்கி அதிக காட்டியுள்ளது பிளிப்கார்ட்.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோரோலா ஜி84 5ஜி போனுக்கு 17 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.18,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கி கார்டை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது.

மோட்டோரோலா ஜி84 5ஜி அம்சங்கள் (Motorola g84 5G specifications): 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 10-பிட் பிஒல்இடி ( 10-bit pOLED) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது மோட்டோரோலா ஜி84 5ஜி போன். 2400×1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
சக்திவாய்ந்த ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 695 8என்எம் (Octa Core Snapdragon 695 8nm) சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்தது இந்த போன். மேலும் அட்ரினோ 691எல் ஜிபியு ஆதரவு (Adreno 619L GPU) கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
இந்த மோட்டோரோலா ஜி84 5ஜி ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டு வெளிவந்தது. பின்பு இந்த போனில் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸலாட் ஆதரவு உள்ளது.ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் (Dolby Atmos), டூயல் மைக்ரோஃபோன்கள் போன்ற சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.
OIS கொண்ட 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி84 5ஜி ஸ்மார்ட்போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.
அதேபோல் தூசி மற்றும் நீர் எதிர்ப்பு ஐபி54 (IP54) சான்றிதழ் பெற்றுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் 30 வாட்ஸ் டர்போ சார்ஜிங் உடன் 5000mAh பேட்டரி உடன் வெளிவந்தது மோட்டோரோலா ஜி84 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக விவா மெஜந்தா, மார்ஷ்மெல்லோ ப்ளூ, மிட்நைட் ப்ளூ நிறங்களில் இந்த போன் வாங்க கிடைக்கும்.

குறிப்பாக 5ஜி (14 5ஜி பேண்ட்ஸ்), டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி84 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்
அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த மோட்டோரோலா ஜி84 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








