Flipkart தசரா ஸ்பெஷல் விற்பனை: Asus ROG Phone 3 ஸ்மார்ட்போனிற்கு சிறப்பு சலுகை அறிவிப்பு.!
Asus ROG போன் 3 மாடல் ஸ்மார்ட்போன்கள் பிளிப்கார்ட் நிறுவனத்தின் 'தசரா ஸ்பெஷல்' விற்பனையின் போது நம்ப முடியாத சலுகையுடன் வாங்குவதற்குக் கிடைக்கிறது. பிளிப்கார்ட் நிறுவனத்தின் இந்த தசரா ஸ்பெஷல் விற்பனை இன்று முதல் தொடங்கி அக்டோபர் 28ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த அட்டகாசமான கேமிங் ஸ்மார்ட்போனிற்கு என்ன சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Asus ராக் போன் 3
Asus நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான ஆசஸ் ராக் போன் 3 ஸ்மார்ட்போனின் மூன்று வேரியண்ட் மாடல்கள் இந்த விற்பனையில் வாங்குவதற்கு சலுகையுடன் கிடைக்கிறது.

நோ காஸ்ட் EMI தள்ளுபடி
பிளிப்கார்ட் கார்ட்லெஸ் கிரெடிட் மற்றும் பிளிப்கார்ட்டுடன் கூட்டுச்சேர்ந்த அனைத்து வங்கிகளின் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மற்றும் பஜாஜ் ஃபின்செர்வ் ஆகிய வாடிக்கையாளர்களுக்கு 3, 6 மற்றும் 9 மாத கால 'நோ காஸ்ட் EMI' தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ரூ .1500 மதிப்பிலான உடனடி தள்ளுபடி
மேலும், கோட்டக் வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள், எச்எஸ்பிசி கிரெடிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் ஈஎம்ஐ பரிவர்த்தனைகளின் மூலம் வாடிக்கையாளர்கள் ரூ .1500 மதிப்பிலான உடனடி தள்ளுபடியைப் பெறலாம்.

ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் கேமிங் போன்
ஆசஸ் ராக் போன் 3 ஸ்மார்ட்போன் மூன்றாம் ஜென் ஃபிளாக்ஷிப் கேமிங் ஸ்மார்ட்போனாகும். இது ஸ்னாப்டிராகன் 865 பிளஸ், 144 ஹெர்ட்ஸ் 10 பிட் எச்டிஆர் அமோலேட் டிஸ்பிளேவுடன் வருகிறது. இதன் கூடுதல் விபரத்தை இப்போது பார்க்கலாம்.

Asus ROG போன் 3 சிறப்பம்சம்
- 6.59' இன்ச் முழு எச்டி பிளஸ் அமோலேட் டிஸ்பிளே
- 144Hz புதுப்பிப்பு வீதம், 270Hz டச் சாம்பலிங் வீதத்துடன் டிஸ்பிளே
- அட்ரினோ 650 ஜி.பீ.யுடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865+ சிப்செட்
- ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்
- 8ஜிபி /12 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி / 256 ஜிபி வரை ஸ்டோரேஜ்
- மைக்ரோ எஸ்டி கார்டு கிடையாது
- 64 மெகாபிக்சல் சோனி IMX686 சென்சார்
- 13 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ்
- 5 மெகாபிக்சல் மேக்ரோ
- 24 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் கேமரா
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- அல்ட்ரா சோனிக் சென்சார் கொண்ட ஏர்டிரிகர் 3 மற்றும் கிரிப் பிரஸ் அம்சம்
- 30W ஃபாஸ்ட் சார்ஜிங்
- 6000 எம்ஏஎச் பேட்டரி

ட்ரிபிள் கேமரா அமைப்பு

Asus ROG Phone 3 விலை பட்டியல்
Asus ROG Phone 3 ஸ்மார்ட்போன், இந்த தசரா ஸ்பெஷல் விற்பனையில் சிறப்பு சலுகையுடன் கிடைக்கிறது என்று நிறுவனம் அறிவித்துள்ளது. Asus ROG Phone 3 போனின் 8 ஜிபி / 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ .49,999 ஆகவும், 12 ஜிபி / 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ .52,999 ஆகவும், அதன் 12 ஜிபி / 256 ஜிபி வேரியண்டின் விலை ரூ .57,999 என்று பட்டியலிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications