பிளிப்கார்ட்: குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் ரியல்மி 6.!
பிளிப்கார்ட் தளத்தில் தற்போது நடைபெற்று வரும் தீபவாளி சிறப்பு விற்பனையில் ரியல்மி 6 ஸ்மார்ட்போன் மாடலை குறைந்த விலையில் வாங்க முடியும். குறிப்பாக 6ஜிபி ரேம் கொண்ட ரியல்மி 6 ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.12,999-ஆக உள்ளது, அதேபோல் 8ஜிபி ரேம் கொண்ட ரியல்மி 6 மாடலின் உண்மை விலை ரூ.14,999-ஆக உள்ளது.

ஆனால் பிளிப்கார்ட் தளத்தில் அறிவிக்கப்பட்ட சிறப்பு சலுகையின் ஒரு பகுதியாக ஐசிஐசிஐ கிரெடிட் & சிட்டி பேங்க் கிரெடிட் & டெபிட் கார்டு மீது ரூ.3,000 என்கிற தள்ளுபடியை வழங்குகிறது. அதன்படி 6ஜிபி ரேம் கொண்ட ரியல்மி 6 மாடலை ரூ.9,999-விலையில் வாங்க முடியும். இந்த ஸ்மார்ட்போன் காமட் ப்ளூ மற்றும் காமட் வைட் கலர் விருப்பங்களில் வாங்க கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி 6 ஸ்மார்ட்போனானது மீடியாடெக்கின் கேமிங் சார்ந்த ஜி 90 டி சிப்செட் கொண்ட முதல் ரியல்மே ஸ்மார்ட்போன் இதுவாகும். 12nm இயங்குதளம் இரண்டு 2.05GHz கார்டெக்ஸ் A76 பெரிய கோர்கள் மற்றும் 6 2GHz கார்டெக்ஸ்- A55 ஆற்றல் திறன் கொண்ட கோர்கள், மாலி-ஜி 76 எம்சி 4 ஜிபியுடன் ஆக்டா-கோர் சிபியுவைக் கொண்டுள்ளது. மேலும் இது 4 ஜிபி, 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் ஆகிய அம்சங்களில் அறிமுகம் ஆகிறது.

இதில் ஃபுல்ஹெச்.டி + ஆக மேம்படுத்தப்பட்டது, இப்போது அது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இது கொரில்லா கிளாஸ் 3 மற்றும் 16MP F / 2.0 செல்ஃபி கேமராவிற்கு ஒரு பஞ்ச் ஹோல் சென்சார் கொண்டது.

ரியல்மி 6 போனானது, 64 ஜிபி மற்றும் 128 ஜிபி சேமிப்பக பதிப்புகளில் வருகிறது, இரண்டுமே இரட்டை சிம் ஸ்லாட்டுகளுடன் அமைந்திருப்பதோடு பிரத்யேக மைக்ரோ எஸ்டி ஸ்லாட்டைப் பெறுகின்றன. அதேபோல் 30W சார்ஜருடன் ஒரு மணி நேரத்தில் சார்ஜ் செய்யக்கூடிய 4,300 mAh பேட்டரியும் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு லென்ஸ் + 2எம்பி போர்ட்ரைட் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.


Click it and Unblock the Notifications