தீபாவளி ஆஃபர்.. 50MP கேமரா.. 6.58-இன்ச் டிஸ்பிளே.. மலிவு விலையில் விவோ 5ஜி போன்.. எந்த மாடல்?
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிளிப்கார்ட் தளத்தில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த விவோ ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இப்போது பார்ப்போம்.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ டி2எக்ஸ் 5ஜி (vivo T2x 5G) ஸ்மார்ட்போனுக்கு தான் 31 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த விவோ ஸ்மார்ட்போன் முன்பு ரூ.18,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட தள்ளுபடி மூலம் விவோ டி2எக்ஸ் 5ஜி போனை ரூ.12,999 விலையில் வாங்க முடியும்.

மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த விவோ டி2எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கினால் 5 சதவீதம் கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். குறிப்பாக இந்த போன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.
இந்த விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போன் 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 2408 × 1080 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. பின்பு அல்ட்ரா ஸ்லிம் பாடி கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மீடியாடெக் டைமன்சிட்டி 6020 (Dimensity 6020) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த விவோ டி2எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த இந்த போனில் எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. அதேபோல் சைடு பேஸிங் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (Side Facing Fingerprint Scanner) கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ போன்.
விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டிழமநா கேமரா சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தெளிவான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன்.

இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. மேலும் 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த போனின் எடை மிகவும் குறைவு.
5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த விவோ டி2எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும் இந்த போன். பின்பு 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.


Click it and Unblock the Notifications








