Home
Mobile

தொடரும் தள்ளுபடி.. ரூ.11,000 டிஸ்கவுண்ட்.. தீபாவளி சேல்கள் முடிஞ்சும் கூட இந்த iPhone ஆபர் முடியல!

அமேசான் இந்தியா மற்றும் பிளிப்கார்ட் ஆகிய பிரபல இ-காமர்ஸ் வலைத்தளங்கள் மட்டுமின்றி, பல ரீடெயில் ஸ்டோர்கள் மற்றும் ஸ்மார்ட்போன் பிராண்டுகள் கூட தத்தம் சொந்த வலைத்தளங்களில் 2025 தீபாவளி சேல்களை அறிவித்து, அதன் கீழ் முரட்டு ஆபர்களை அள்ளி கொடுத்து அதகளம் செய்தன.

எல்லாமே ஓய்ந்துவிட்டன. ஆனால் பிளிப்கார்ட் ஓயவில்லை. இன்னமும் இது ஐபோன் 16 மீது நல்ல டிஸ்கவுண்ட்டை வழங்குகிறது. தற்போது பிளிப்கார்ட்டில் ஐபோன் 16 மாடலின் பேஸிக் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன், அதன் அசல் அறிமுக விலையான ரூ.79,900 க்கு பதிலாக ரூ.11,000 நேரடி விலை குறைப்பை பெற்று ரூ.68,900 க்கு வாங்க கிடைக்கிறது.

ரூ.11,000 டிஸ்கவுண்ட்.. தொடரும் iPhone 16 தள்ளுபடி!

அதாவது ரூ.68,900 என்கிற ஆபர் விலையில் ஐபோன் 16 மாடலை வாங்க நீங்கள் எந்த வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இது ஐபோன் 16 மாடல் மீது கிடைக்கும் நேரடி விலை குறைப்பு ஆகும். கூடுதலாக யுபிஐ பேமண்ட், ஆக்சிஸ் வங்கி மற்றும் எஸ்பிஐ வங்கி ஆபர்களும் கிடைக்கிறது. இதன்கீழ் ஐபோன் 16-ன் விலையை இன்னும் குறைக்க முடியும்.

ஆப்பிளின் புதிய ஐபோன் 17 மாடலின் இந்திய விலை விவரங்கள்: இந்தியாவில், ஐபோன் 17 மாடலின் ஆரம்ப விலை ரூ.82,900 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது லாவெண்டர், மிஸ்ட் ப்ளூ, சேஜ், ஒயிட் மற்றும் பிளாக் ஆகிய கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது.

ஐபோன் 17 மாடலின் விரிவான அம்சங்கள்: ஐஓஎஸ் 26 (iOS 26) கொண்டு இயங்கும் ஐபோன் 17 மாடல் ஆனது டூயல் சிம் (நானோ + இசிம்) ஆதரவுடன் வருகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் உடனான பெரிய 6.3-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

மேலும் ஐபோன் 17 மாடலின் டிஸ்பிளேவானது - புதிய ப்ரோமோஷன் (ProMotion) பேனலை ஆதரிக்கிறது. இது ஐபோன் 16 ப்ரோ மாடல்களில் மாடல்களில் இருந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட அம்சமாகும். மேலும் 3000 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், மேம்படுத்தப்பட்ட செராமிக் ஷீல்ட் 2 பாதுகாப்பு மற்றும் ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே ஆகிய அம்சங்களையும் ஆதரிக்கிறது.

தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்கை கொண்டுள்ள ஐபோன் 17 மாடலின் கேமராக்களை பொறுத்தவரை - இது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் எப் /1.6 அபெர்க்ஷர் மற்றும் சென்சார்-ஷிப்ட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடனான 48 மெகாபிக்சல் ஃப்யூஷன் பிரைமரி கேமரா உள்ளது

இந்த சென்சாரால் 52மிமீ குவிய நீளம் கொண்ட 2எக்ஸ் டெலிஃபோட்டோ கேமராவாகவும் செயல்பட முடியும். இதனுடன் எப்/2.2 அபெர்க்ஷர் மற்றும் மேக்ரோ திறன்களை கொண்ட 48 மெகாபிக்சல் ஃப்யூஷன் அல்ட்ரா-வைட் கேமராவும் உள்ளது. முன்பக்கத்தில், நீங்கள் ஒரு புதிய சென்டர் ஸ்டேஜ் செல்ஃபி கேமராவை பெறுவீர்கள்.

சிப்செட்டை பொறுத்தவரை ஐபோன் 17 மாடல் ஆனது ஏ19 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 16-கோர் நியூரல் எஞ்சினை கொண்டுள்ளது. ஆப்பிளின் கூற்றுப்படி, பவர் எபிஷியன்ட் ஏஐ இன்பெரென்ஸ் (Power-efficient AI inference), அதிகரித்த மெமரி பேண்ட்வித் மற்றும் மேம்பட்ட செயல்திறனை வழங்கும்.

ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 17 மாடலின் ஸ்டோரேஜையும் அதிகரித்துள்ளது, பேஸிக் ஸ்டோரேஜ் ஆக 256ஜிபி உள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி, ஐபோன் 17 மாடல் ஆனது ஐபோன் 16 உடன் ஒப்பிடும்போது எட்டு மணிநேரம் வரை கூடுதல் பேட்டரி ஆயுளை வழங்கும். மேலும் இது வேகமாக சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது. ஆப்பிளின் கூற்றுப்படி சில நிமிடங்களில் 50 சதவீதம் சார்ஜ் ஆகும்; 10 நிமிட சார்ஜ் எட்டு மணிநேர பயன்பாட்டை வழங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart Continues The Offer on iPhone 16 128GB gets Rs 11000 Direct Price Cut
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X