Home
Mobile

ஆரம்பமே அதிரடி தான் போங்க.! ப்ளிப்கார்ட்டின் முதல் ஸ்மார்ட்போன்.!

அதென்ன ஸ்மார்ட்போன்.? அது என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்.?அதன் விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் மட்டும் நிகழுமா.?

By Muthuraj

இந்த 2017-ஆம் ஆண்டு, கடந்த ஜூலை மாதம் ப்ளிப்கார்ட் அதன் பில்லியன் பிராண்ட் நிறுவனத்தை அறிவித்தது. இதன் வழியாக ப்ளிப்கார்ட் நாட்டில் அதன் முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் திட்டத்தை கொண்டுள்ளதென்பது வெளிப்படையாக தெரிய வந்தது.

ஆரம்பமே அதிரடி தான் போங்க.! ப்ளிப்கார்ட்டின் முதல் ஸ்மார்ட்போன்.!

அதன் பின்னர் அதென்ன ஸ்மார்ட்போன்.? அது என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்.?அதன் விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் மட்டும் நிகழுமா.? போன்ற பல கேள்விகள் எழுந்தன. அந்த கேள்விகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் தற்போது பில்லியன் பிராண்ட் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன.!

என்ன ஸ்மார்ட்போன்.? என்ன பெயர்.?

என்ன ஸ்மார்ட்போன்.? என்ன பெயர்.?

பில்லியன் கேப்ட்சர் ப்ளஸ் ஸ்மார்ட்போனிற்கான ஒரு பிரத்யேக பக்கத்தினை வெளிப்படுத்தியுள்ள ப்ளிப்கார்ட் நிறுவனம், அதன் வழியாக அதன் ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்களையும் உறுதிப்படுத்தியுள்ளது. பில்லியம் - ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் சுய-பிராண்ட் நிறுவனமாகும்.

பில்லியன் பிராண்ட் எதன் கீழ் இயங்குகிறது.?

பில்லியன் பிராண்ட் எதன் கீழ் இயங்குகிறது.?

இந்த பில்லியன் நிறுவனத்தின் கீழ் தான் ப்ளிப்கார்ட், அதன் பல்வேறு தயாரிப்புகளை குறிப்பாக இந்திய சந்தைக்காக தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் என்பதும், கூறப்படும் பில்லியன் கேப்ட்சர் ப்ளஸ் தான் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரதான அம்சம் என்ன.?

பிரதான அம்சம் என்ன.?

வருகிற நவம்பர் 15-ஆம் தேதி அறிமுகமாகவுள்ள பில்லியன் கேப்ட்சர் ப்ளஸ் ஸ்மார்ட்போன் ஆனது டூயல் டோன் எல்இடி ப்ளாஷ் கொண்ட இரட்டை கேமரா அம்சத்தினை கொண்டுவரும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அறிமுகமான அன்றே இக்கருவி ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனைக்கும் வரவுள்ளது.

வேறென்ன கேமரா அம்சங்கள்.?

வேறென்ன கேமரா அம்சங்கள்.?

மேலும் வெளியான டீஸரின்படி சில உறுதிசெய்யப்பட்ட கேமரா அம்சங்ககளையும் அறிய முடிகிறது. பில்லியன் கேப்ட்சர் ப்ளஸ் ஸ்மார்ட்போனின் கேமராவில் பொக்கே விளைவு மற்றும் 'சூப்பர் நைட்' மோட் இடம்பெறுகின்றன.x

பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளதா.?

பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளதா.?

மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன், அதன் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளது. வரம்பற்ற க்ளவுட் ஸ்டோரேஜ் கொண்டிருக்குமென எதிர்பார்க்கப்படும் இக்கருவியின் வெளியீட்டின் போது, அதுசார்ந்த அதிக விவரங்களை எதிர்பார்க்கலாம்.

வடிவமைப்பு மற்றும் ஓஎஸ்.?m

வடிவமைப்பு மற்றும் ஓஎஸ்.?m

ப்ளிப்கார்ட்டின் இந்த பில்லியன் கேப்ட்சர் ப்ளஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஒரு முழுமையான எச்டி டிஸ்ப்ளே மற்றும் வட்ட முனைகள் கொண்ட வடிவமைப்பு உடன் ஆண்ட்ராய்டு நௌவ்கட் ஆகிய அம்சங்களையும் கொண்டிருக்கலாம்.

விற்பனைக்கு பிந்தைய சர்வீஸ் பணிகள்.?

விற்பனைக்கு பிந்தைய சர்வீஸ் பணிகள்.?

மேலும் வெளியீட்டு நாளில் இக்கருவியுடன் இணைக்கப்பட்ட சலுகைகள் வெளிப்படுத்தப்படும் என்று பிலிப்கார்ட் அறிவித்துள்ளது. ஆன்லைன் சில்லறை விற்பனையாளரான ப்ளிப்கார்ட் அதன் பில்லியன் பிராண்டின் விற்பனைக்கு பிந்தைய சர்வீஸ் பணிகளையும்னை தொடந்து சிறப்பான முறையில் செய்து வருகிறது. நிறுவனத்தின்படி, இந்தியா முழுவதும் 125 நகரங்களில் 130 சேவை மையங்கள் உள்ளன.

Best Mobiles in India

English summary
Flipkart Billion Capture+ Smartphone With Dual Cameras to Launch on November 15. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X