iPhone 16e மீது டிஸ்கவுண்ட்.. iPhone 16 மீது விலை குறைப்பு.. மார்ச் 17 வரை Flipkart பிக் சேவிங் டேஸ் சேல்!
பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன பிளிப்கார்ட் தனது தளத்தில் பிக் சேவிங்ஸ் டேஸ் சேல் (Flipkart Big Savings Days Sale) என்கிற சிறப்பு விற்பனையை நடத்துகிறது. இந்த விற்பனை மார்ச் 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 13 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.
இதன்கீழ் ஆப்பிளின் லேட்டஸ்ட் மாடல் ஆன ஐபோன் 16இ (iPhone 16e) முதல் சற்றே பழைய மாடல்கள் ஆன ஐபோன் 15 (iPhone 15) மற்றும் ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus) வரை பல மாடல்கள் அபாரமான விலை குறைப்பு மற்றும் தள்ளுபடிகளை பெற்று "முன்னெப்போதும்" இல்லாத அளவில் மலிவான விலைக்கு வாங்க கிடைக்கின்றன.

ஐபோன் 16இ (iPhone 16e) மீது ஐசிஐசிஐ வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி கிரெடிட் கார்டுகளில் ரூ.4,000 உடனடி கேஷ்பேக் மற்றும் ரூ.8,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது. இதன்கீழ் ஐபோன் 16இ மாடலை அதன் அசல் விலையான ரூ.59,900 க்கு பதிலாக ரூ.47,900 க்கு வாங்க முடியும்.
ஐபோன் 16 (iPhone 16) மீது ரூ.9,901 தற்காலிக விலை குறைப்பு, ரூ.9,799 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டில் 5% கேஷ்பேக் ஆகிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் ஐபோன் 16 மாடலை அதன் அசல் விலையான ரூ.79,900 க்கு பதிலாக ரூ.56,205 க்கு வாங்க முடியும்.
ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus) மீது ரூ.10,901 தற்காலிக விலை குறைப்பு, ரூ.13,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ், யுபிஐ பேமண்ட்களுக்கு ரூ.2000 டிஸ்கவுண்ட், ரூ.1000 எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு டிஸ்கவுண்ட், பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டில் 5% கேஷ்பேக் ஆகிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் ஐபோன் 16 பிளஸ் மாடலை அதன் அசல் விலையான ரூ.89,900 க்கு பதிலாக ரூ.58,504 க்கு வாங்க முடியும்.
ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மீது ரூ.7,000 தற்காலிக விலை குறைப்பு, ரூ.62,200 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ், யுபிஐ பேமண்ட்களுக்கு ரூ.2000 டிஸ்கவுண்ட், ரூ.1000 எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு டிஸ்கவுண்ட் ஆகிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் ஐபோன் 16 ப்ரோ மாடலின் விலையை ரூ.1,19,900 க்கு பதிலாக ரூ.44,900 வரை குறைக்க முடியும்.
ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) மீது ரூ.9,000 தற்காலிக விலை குறைப்பு, ரூ.65,200 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ், யுபிஐ பேமண்ட்களுக்கு ரூ.2000 டிஸ்கவுண்ட், பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டில் 5% கேஷ்பேக் ஆகிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலையை ரூ.1,44,900 க்கு பதிலாக ரூ.61,655 வரை குறைக்க முடியும்.
ஐபோன் 15 (iPhone 15) மீது ரூ.4,901 தற்காலிக விலை குறைப்பு, ரூ.2,799 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.1000 எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு டிஸ்கவுண்ட், பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டில் 5% கேஷ்பேக் ஆகிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் ஐபோன் 15 மாடலை அதன் அசல் விலையான ரூ.69,900 க்கு பதிலாக ரூ.61,200 க்கு வாங்க முடியும்.
ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus) மீது ரூ.10,901 தற்காலிக விலை குறைப்பு, ரூ.6,799 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.1000 எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு டிஸ்கவுண்ட், பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டில் 5% கேஷ்பேக் ஆகிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் ஐபோன் 15 பிளஸ் மாடலை அதன் அசல் விலையான ரூ.79,900 க்கு பதிலாக ரூ.57,205 க்கு வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications








