Flipkart சிறப்பு விற்பனை: ஸ்மார்ட்போன்களுக்கு நம்ப முடியாத விலைகுறைப்பு.!
பிளிப்கார்ட் தளத்தில் Flipkart Big Savings Days Sale எனும் சிறப்பு விற்பனை நடைபெற உள்ளது. அதாவது இந்த சிறப்பு விற்பனை வரும் மார்ச் 11-ம் தேதி முதல் மார்ச் 15 நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.
பிளிப்கார்ட் பிளஸ் பயனர்கள்
அதேபோல் இந்த சிறப்பு விற்பனை பிளிப்கார்ட் பிளஸ் பயனர்கள் மார்ச் 10-ம் தேதி சிறப்பு விற்பனையில் பொருட்களை வாங்கிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சிறப்பு விற்பனையில் வழங்கப்பட இருக்கும் முழு சலுகை விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஆனால் எந்தெந்த மாடல்களுக்கு சலுகைகள் வழங்கப்பட உள்ளது என்ற டீசர் வெளியாகி உள்ளது.

ஐபோன்கள்
அதாவது வெளியான டீசரில் ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ் மாடல்கள் ரூ.70,000-க்கும் குறைந்த விலையில் கிடைக்கும் எனத் தெரியவந்துள்ளது. இதுதவிர கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சில போன்களுக்கும் தள்ளுபடி வழங்கப்பட உள்ளன. குறிப்பாக கம்மி விலையில் போன்களை வாங்க நினைப்பவர்கள் இந்த சிறப்பு விற்பனையை பயன்படுத்துவது மிகவும் நல்லது.
ஆண்ட்ராய்டு போன்கள்
மேலும் இந்த சிறப்பு விற்பனையில் கூகுள் பிக்சல் 7 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.46,999-விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. பின்பு கூகுள் பிக்சல் ஏ ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.67,999-விலையில் வாங்க கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

அதேபோல் பிளிப்கார்ட தளத்தில் நடைபெற உள்ள சிறப்பு விற்பனையில் கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போன் ரூ.26,999-விலையில் வாங்க கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போன் ஆனது 6.14-இன்ச் ஃபுவ் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 4410 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.
பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் நத்திங் போன் (1) மாடலையும் குறைந்த விலையில் வாங்க முடியும். அதாவது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட நத்திங் போன் (1) மாடல் ஆனது ரூ.25,999-விலையில் வாங்க கிடைக்கும் என்று கூறப்படுகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 778 பிளஸ் பிராசஸர்,4500 எம்ஏஎச் பேட்டரி, 6.55-இன்ச் டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் மற்றும் ஒன்பிளஸ், விவோ, மோட்டோ, ரியல்மி உள்ளிட்ட பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு போன்களை வாங்கினால் உடனடி தள்ளுபடியும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

தற்போது பிளிப்கார்ட் நிறுவனம் சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. ஆனால் கூடிய விரைவில் அமேசான் நிறுவனமும் சிறப்பு விற்பனையை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் குறைந்த விலையில் ஒரு நல்ல ஸ்மார்ட்போனை வாங்க விரும்பும் பயனர்கள் இந்த சிறப்பு விற்பனையைப் பயன்படுத்துவது நல்லது.


Click it and Unblock the Notifications








