பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ்: குறைந்த விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன்களை வாங்க சரியான வாய்ப்பு.!
பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் எனும் சிறப்பு விற்பனையின் மூலம் ஸ்மார்ட்போன், லேப்டாப், டிவி உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கு பிளிப்கார்ட் தளத்தில் சிறப்பு சலுகைள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிறப்பு விற்பனை ஜூலை 25 முதல் ஜூலை 29 வரை நடக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் Flipkart Plus உறுப்பினர்களுக்கு ஜூலை 24 முதலே இந்த சிறப்பு விற்பனைக்கு அணுகல் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பின்பு பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சாம்சங், ரியல்மி, மோட்டோ உள்ளிட்ட அட்டகாசமான ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையில் கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்போனை ரூ.17,999-விலையில் வாங்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக 20 சதவிகிதம் இந்த சாதனத்திற்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் சாம்சங் கேலக்ஸி எஃப் 12 ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.12,999-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனை மூலம் ரூ.9,999-ஆக உள்ளது. குறிப்பாக 48எம்பி கேமரா, 6000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான கேலக்ஸி எஃப்12 ஸ்மார்ட்போன்.
மேலும் சாம்சங் கேலக்ஸி எஃப்02எஸ் ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.10,499-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனை மூலம் ரூ.8,999-ஆக உள்ளது. குறிப்பாக 13எம்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான கேலக்ஸி எஃப்12 ஸ்மார்ட்போன்.

குறிப்பாக ஐபோன் எக்ஸ்ஆர் சாதனத்தின் உண்மை விலை ரூ.47,900-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையின் மூலம் ரூ.37,999-க்கு வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சிறப்பு விற்பனையில் அசத்தலான கூகுள் பிக்சல் 4ஏ ஸமார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த சிறப்பு விற்பனையில் கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனை ரூ.29,999-க்கு வாங்க முடியும் என்று கூறப்படுகிறது.
போக்கோ எம்3 ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.10,499-விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 10 சதவிகிதம் இந்த சாதனத்திற்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications