Flipkart Big Saving Days Sale: மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
பிளிப்கார்ட் வலைத்தளத்தில் Flipkart Big Saving Days Sale எனும் தலைப்பில் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த விலைகுறைப்பு சலுகை ஆனது ஜூலை 26-ம் தேதி முதல் ஜூலை 29-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்பு சிறப்பு விற்பனையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது விலைகுறைக்கப்பட்டமோட்டோரோலா
ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

மோட்டோ ஜி40 ஃபியூஷன்
பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் மோட்டோ ஜி40 ஃபியூஷன் ஸ்மார்ட்போனுக்கு 20 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.அதன்படி 4ஜி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி40 ஃபியூஷன் மாடலின் அசல் விலை ரூ.16,999-ஆக உள்ளது. ஆனால்இந்த சிறப்பு விற்பனையின் மூலம் ரூ.13,499-விலையில் வாங்க முடியும்.

மோட்டோரோலா இ7 பவர்
2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா இ7 பவர் ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.9,999-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.6,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த சாதனத்திற்கு 30 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா ஜி10 பவர்
2ஜிபி ரேம் மற்றம் 32ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா ஜி10 பவர் ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.12,999-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.9,999-விலையில் வாங்க முடியும். அதாவது இந்த சாதனத்திற்கு 23 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா ரேசர்
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா ரேசர் சாதனத்தின் அசல் விலை ரூ.1,49,999-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையின் மூலம் ரூ.54,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த சாதனத்திற்கு 63 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா ஜி60
பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோரோலா ஜி60 ஸ்மார்ட்போனுக்கு 22 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா ஜி60 ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.21,999-ஆக உள்ளது.ஆனால் இந்த சிறப்பு விற்பனையின் மூலம் ரூ.16999-விலையில் வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications