சலுகைகளுடன் இன்று விற்பனைக்கு வரும் போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போன்.!
போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போன் இன்று மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். குறிப்பாக இந்த சாதனம் குறிப்பிட்ட நாட்கள் வரை தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கன்மெட்டல் சில்வர் மற்றும் பிரிடேட்டர் பிளாக் நிறங்களில் போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

அசல் விலை
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எஃப்3 ஜிடி மாடலின் விலை ரூ.26,999-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எஃப்3 ஜிடி மாடலின் விலை ரூ.28,999-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட போக்கோ எஃப்3 ஜிடி மாடலின் விலை ரூ.30,999-ஆக உள்ளது.
சலுகைகள்
ஆனால் முதல் வார விற்பனையின் போது இவைகள் முறையே ரூ.25,999, ரூ.27,999 மற்றும் ரூ.29,999 விலைகளில் கிடைக்கும். அடுத்து இரண்டாவது வார விற்பனையில் இவைகள் முறையே ரூ.26,499, ரூ.28,499, மற்றும் ரூ.30,499-விலைகளில் வாங்க கிடைக்கும். பின்பு ஆகஸ்ட் 9-ம் தேதிக்கு பின்பு விலைகள் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று கூறப்படுகிறது.
இதுதவிர போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போனுக்கு நம்பமுடியாத அசத்தலான சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஐசிஐசிஐ வங்கி கார்டுகள் பயன்படுத்தும் பயனர்களுக்கு ரூ.1,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும் மற்றும் நோ காஸ்ட் இ.எம்.ஐ மற்றும் எக்ஸ்சேன்ஜ் சலுகைகளும் வழங்கப்படுகிறது.
போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போன் 6.67-இன்ச் Turbo AMOLED10-பிட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு எச்டிஆர் 10 பிளஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாதனம்.
போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் Dimensity 1200 SoC சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய சாதனம்.
போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய சாதனம்.
இந்த புதிய ஸ்மார்ட்போனில் 5065 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போன்.
டூயல் சிம் 5ஜி, வைஃபை ஏசி, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications