Flipkart Big Saving Days Sale 2021: ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
பிளிப்கார்ட் வலைத்தளத்தில் Flipkart Big Saving Days Sale 2021 எனும் தலைப்பில் பல்வேறு சாதனங்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிறப்பு விறப்பனை வரும் ஜூலை 29-ம் தேதி வரை மட்டுமே இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சிறப்பு விற்பனையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி, சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சிறப்பு விற்பனையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது விலைகுறைக்கப்பட்ட
ஸ்மாரட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

ரெட்மி 9ஐ
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9ஐ ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.9,999-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.8,299-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த சாதனத்திற்கு 17 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 9
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.14,999-ஆக உள்ளது. ஆனால் பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் ரூ.11,499-விலையில் வாங்க முடியும். அதாவது இந்த சாதனத்திற்கு 23 சதவிகிதம் தள்ளுபடி
வழங்கப்பட்டுள்ளது.

ரெட்மி 9 பவர்
பிளிப்கார்ட் தளத்தில் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனுக்கு 21 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சாதனத்தின் உண்மை விலை ரூ.13,999-ஆக உள்ளது, ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.10,999-விலையில் வாங்க முடியும்.

ரெட்மி நோட் 10எஸ்
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.16300-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.15,973-ஆக உள்ளது. பின்பு இந்த சாதனத்திற்கு 3 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

சியோமி மி 11 லைட்
சியோமி நிறுவனத்தின் மி 11 லைட் சாதனத்திற்கு பிளிப்கார்ட் தளத்தில் 12 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.24,999-ஆக உள்ளது. ஆனால் சிறப்பு விற்பனையில் ரூ.21,999-விலையில் வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications