Flipkart ஆபர்: 5ஜி ஸ்மார்ட்போன்களை தள்ளுபடியில் வாங்க இதுதான் சரியான நேரம்.!

|

பிளிப்கார்ட் தளத்தில் Flipkart Big Saving Days 2022எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனை ஆனது டிசம்பர் 16-ம் தேதி தொடங்கி டிசம்பர் 21-ம் தேதி வரை நடைபெறும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன், லேப்டாப்,டேப்லெட், ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட பல சாதனங்களுக்குத் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் ஒரு நல்ல 5ஜி ஸ்மார்ட்போனை தள்ளுபடி விலையில் வாங்க முடியும். அதேபோல் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட சில அசத்தலான ஸ்மார்ட்போன்களுக்கும் தற்போது தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இப்போது பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும் அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்களை பார்ப்போம்.

Flipkart: 5ஜி ஸ்மார்ட்போன்களை தள்ளுபடியில் வாங்க இதுதான் சரியான நேரம்!

மோட்டோரோலா ஜி62 5ஜி
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மோட்டோரோலா ஜி62 5ஜி ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 27 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ.15,999-க்கு வாங்க கிடைக்கும். இதுதவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸஜ்மார்ட்போனை வாங்கினால் 10 சதவீதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும். 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட், 6.55-இன்ச் டிஸ்பிளே, 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த மோட்டோ போன்.

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போக்கோ எம்4 ப்ரோ 5ஜி மாடல் முன்பு ரூ.16,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது பிளிப்கார்ட் அறிவித்துள்ள விலைகுறைப்பின் மூலம் இந்த 5ஜி போனை ரூ.12,999-விலையில் வாங்க முடியும். இதுதவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும். 6.6-இன்ச் டிஸ்பிளே, 50எம்பி டூயல் ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, மீடியாடெக் Dimensity 810 சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போக்கோ ஸ்மார்ட்போன்.

இன்ஃபினிக்ஸ் நோட் 12 5ஜி
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இன்ஃபினிக்ஸ் நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போனை ரூ.13,999-விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்த இந்த ஸ்மார்ட்போனை வாங்கும்போது 10 சதவீதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும். அதேபோல் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, 6.7-இன்ச் டிஸ்பிளே, 5000 எம்ஏஎச் பேட்டரி, மீடியாடெக் Dimensity 810 5Gபிராசஸர் உள்ளிட்ட தரமான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

Flipkart: 5ஜி ஸ்மார்ட்போன்களை தள்ளுபடியில் வாங்க இதுதான் சரியான நேரம்!

சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி
அசத்தலான சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி போனுக்கு 39 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த போனை ரு.13,999-விலையில் வாங்க முடியும். இதுதவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் 10 சதவீதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும். குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி சிப்செட், 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, 6.6-இன்ச் டிஸ்பிளே, 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட அசத்தலான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

ரியல்மி 9 5ஜி
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி 9 5ஜி ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 21 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த போன் ரூ.14,999-க்கு வாங்க கிடைக்கும். இதுதவிர தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் போது ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும். மீடியாடெக் Dimensity 810 சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி, 48எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, 6.5-இன்ச் டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

ரெட்மி நோட் 10டி 5ஜி
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 11 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது தற்போது இந்த ஸ்மார்ட்போனை ரூ.14,999-விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு இந்த போனை வாங்கினால் 5சதவீதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும். 48எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, மீடியாடெக் Dimensity 700 சிப்செட், 6.5-இன்ச் டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

Flipkart: 5ஜி ஸ்மார்ட்போன்களை தள்ளுபடியில் வாங்க இதுதான் சரியான நேரம்!

போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி
பிளிப்கார்ட் தளத்தில் போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை தற்போது ரூ.15,999-விலையில் வாங்க முடியும். இதுதவிர தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.1000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். 64எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளது.

Best Mobiles in India

English summary
Flipkart Big Saving Days 2022: 41 percent discount announced on 5G smartphones: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X