Flipkart Big Saving Days 2021:போக்கோ ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் வாங்க சரியான நேரம்.!
அமேசான் வலைத்தளத்தில் அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் எனும் சிறப்பு விற்பனை நாளை துவங்க உள்ளது. இதற்கு போட்டியாக பிளிப்கார்ட் வலைத்தளத்திலும் பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனை துவங்க உள்ளது. அதன்படி பிளிப்கார்ட் தளத்தில் இந்த சிறப்பு விற்பனை ஆகஸ்ட் 5-ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 9-ம் தேதி முடிவடைகிறது.

குறிப்பாக பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன், டிவி, லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சிறப்பு விற்பனையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிளிப்கார்ட்நிறுவனம் இந்த சிறப்பு சலுகையை வழங்குவதாக கூறப்படுகிறது. அதேபோல் பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்களுக்கு தற்போது முதலே பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின 2021 விற்பனை நடைமுறையில் இருக்கிறது.பிற அனைத்து பயனர்களுக்கும் இன்று நள்ளிரவு 12 மணிமுதல் பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனையில் சாதனங்களை சலுகை விலையில் வாங்கலாம்.

இந்நிலையில் போக்கோ ட்விட்டர் பக்கத்தில் போக்கோ ஸ்மார்ட்போன்களுக்கான சலுகைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பிளிப்கார்ட் தளத்தில் போக்கோ ஸ்மார்ட்போன்களுக்கான தள்ளுபடி குறித்த விவரங்கள் வெளிவந்துள்ளது, அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
ட்விட்டர் தளத்தில் வெளியான தகவலின்படி, போக்கோ சி3 ஸ்மார்ட்போனை ரூ.6,749 விலையிலும், போக்கோ எம்2 மாடலை ரூ.8,999-விலையிலும் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போக்கோ எம்3 ப்ரோ 5ஜி மாடலை ரூ.12,999-விலையிலும்,போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனை ரூ.16,999-விலையிலும் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்கோ எம்3 மாடலை ரூ.9,499-முதல் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மொபைல் போன்கள், லேப்டாப்கள், டிவிகள் உள்ளிட்ட பல்வேறு எலெக்ட்ரானிக் சாதனங்களை வாங்க இதுதான் சரியான நேரம். குறிப்பாக மோட்டோ, சாம்சங், மைக்ரோமேக்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை கம்மி விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி ஸ்மார்ட்போன்கள், ஐபோன்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவேஇந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள்என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications