Home
Mobile

அக்டோபர் 21 வரை பொறுங்க.. பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல்.. ஆஃபரில் Motorola போன்கள்.. இதோ பட்டியல்..

பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் வரும் அக்டோபர் 21-ம் தேதி பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல் (Flipkart Big Diwali sale) எனும் சிறப்பு விற்பனை நடைபெற உள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் போன்களை குறைந்த விலையில் வாங்க முடியும். அதேபோல் மோட்டோரோலா (Motorola) போன்களுக்கும் இந்த சிறப்பு விற்பனையில் தள்ளுபடி வழங்கப்பட உள்ளன. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

மோட்டோ ஜி85 5ஜி (moto G85 5G) போன் ஆனது முன்பு ரூ.17,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் பிளிப்கார்ட் ஆஃபர் மூலம் ரூ.16,999 விலையில் இந்த போன் விற்பனை செய்யப்படும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே ரூ.15,999 இருந்தால் இந்த போனை வாங்கிவிட முடியும்.

அக்டோபர் 21 வரை பொறுங்க.. பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல்..

மோட்டோ ஜி64 5ஜி (Moto G64 5G) போன் முன்பு ரூ.16,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் இந்த போன் ரூ.14,999 விலையில் விற்பனைக்கு வரும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே ரூ.13,999 விலையில் இந்த போனை வாங்கிவிட முடியும்.

மோட்டோ ஜி45 5ஜி (Moto G45 5G) போன் ஆனது ரூ.10,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. அக்டோபர் 21-ம் தேதி நடைபெறும் சிறப்பு விற்பனையில் இந்த போன் ரூ.9,999 விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 50எம்பி கேமரா, பெரிய டிஸ்பிளே, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பாக அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

மோட்டோ ஜி04எஸ் (Moto G04s) ஸ்மார்ட்போன் ஆனது முன்பு ரூ.7,499 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் ரூ.6,999 விலையில் இந்த போனை வாங்கிவிட முடியும். டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட், 50எம்பி கேமரா, 5000mAh பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ (Motorola Edge 50 Neo) போன் ரூ.23,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் இந்த போனுக்கு ரூ.1000 வங்கி சலுகை கிடைக்கும். எனவே இந்த போனை ரூ.22,999 விலையில் வாங்கிவிட முடியும். மீடியாடெக் டைமன்சிட்டி 7300 (Mediatek Dimensity 7300 chipset) சிப்செட், பிஒஎல்இடி டிஸ்பிளே (pOLED display), 50எம்பி கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

அக்டோபர் 21 வரை பொறுங்க.. பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல்..

மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் (Motorola Edge 50 Fusion) போன் ரூ.22,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற உள்ள பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல் எனும் விற்பனையில் இந்த போனை ரூ.20,999 விலையில் வாங்கிவிட முடியும். மேலும் சோனி எல்ஒய்டி சென்சாருடன் மெயின் கேமரா, 68W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ (Motorola Edge 50 Pro) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.35,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் இந்த போன் ரூ,29,999 விலையில் விற்பனைக்கும் வரும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடி கிடைக்கும். எனவே இந்த போன் ரூ.27,999-க்கு வாங்க கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart Big Diwali Sale Reveals Discounted Motorola Phones: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X