ஓடியாங்க, ஓடியாங்க.. தீபாவளி ஆஃபர்.. 108MP கேமரா.. 33W சார்ஜிங்.. மலிவு விலையில் போக்கோ 5ஜி போன்..
பிளிப்கார்ட் தளத்தில் பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல் (Flipkart Big Diwali sale) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில அசத்தலான போக்கோ எம்6 பிளஸ் 5ஜி (Poco M6 Plus 5G) போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் 108எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் சிப்செட் உள்ளிட்ட அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது போக்கோ எம்6 பிளஸ் 5ஜி வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் போக்கோ எம்6 பிளஸ் 5ஜி போனுக்கு 28 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.11,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடி வழங்கப்படும். எனவே இந்த போனை ரூ.10249 விலையில் இந்த போனை வாங்கிவிடலாம்.

போக்கோ எம்6 பிளஸ் 5ஜி அம்சங்கள் (Poco M6 Plus 5G Specifications): 6.79-இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி (LCD) டிஸ்பிளேகொண்டுள்ளது இந்த போக்கோ போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2 2460 x 1080 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் , கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) மற்றும் 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உள்ளன.
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 ஏஈ 4என்எம் (Octa Core Snapdragon 4 Gen 2 AE 4nm) சிபசெட் உடன் போக்கோ எம்6 பிளஸ் 5ஜி போன் வெளிவந்துள்ளது. இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளது.
ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS)மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த போக்கோ போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போக்கோ போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.
இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), IP53 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), பாட்டம் ஃபயரிங் லவுட்ஸ்பீக்கர் (Bottom Firing Loudspeaker) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் உள்ளன.

சாம்சங் ஐசோசெல் எச்எம்6 (Samsung ISOCELL HM6) சென்சாருடன் 108 எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போக்கோ போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன.
5030mAh பேட்டரி உடன் இந்த போக்கோ எம்6 பிளஸ் 5ஜி போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனை விரைவாக செய்துவிட முடியும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் குறைந்த விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








