Flipkart Big Diwali Sale: போக்கோ ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!
அண்மையில் நடைபெற்ற பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் மொத்தம் 1 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளதாக போக்கோ நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில் பிளிப்காரட் பிக் தீபாவளி விற்பனை நிகழ்வில் போக்கோ நிறுவனம் அதிரடி சலுகைகளுடன் மீண்டும் திரும்பியுள்ளது.

அதன்படி இன்று துவங்கும் பிக் தீபாவளி விற்பனையின் போது தள்ளுபடி விலையில் பல போக்கோ ஸ்மார்ட்போன்களை வாங்க முடியும். பின்பு இந்த விற்பனை நவம்பர் 7-ம் தேதி முதல் துவங்கி (பிளிப்கார்ட் பிளஸ் பயனர்களுக்கு மதியம் 12 மணி முதலும், மற்றும் 8 அக்டோபர் 00:01 மணி முதல் அனைத்து பயனர்களுக்கும் அணுக கிடைக்கும்) நவம்பர் 12 வரை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் இந்த சிறப்பு விற்பனையில் போக்கோ சி 3, போக்கோ எம் 2, போக்கோ எம் 2 ப்ரோ, போக்ஸ் எக்ஸ் 2, போக்கோ எக்ஸ் 3 போன்ற பல போக்கோ ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் வாங்க முடியும்.

போக்கோ சி 3 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மாடலின் மீது ரூ.1500 என்கிற உடனடி தள்ளுபடி (ப்ரீபெயிட் பரிவர்தனைகளில் ரூ.2000) மற்றும் போக்கோ சி 3 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி மாடலின் ஸ்மார்ட்போன் மீது ரூ.1000 (ப்ரீபெய்ட் பரிவர்த்தனைகளில் ரூ.1500) என்கிற தள்ளுபடியும் கிடைக்கும்.

போக்கோ எக்ஸ் 3 ஸ்மார்ட்போன் வாங்கு பயனர்கள் கூடுதலாக ரூ.25000 தள்ளுபடியை பெறமுடியும். அதேசமயம் போக்கோ எம் 2 ப்ரோ ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு ரூ.2000 தள்ளுபடி கிடைக்கும்.

மேலே குறிப்பிட்ட சலுகைகள் ஐசிஐசிஐ, சிட்டி, ஆக்சிஸ், கோட்டக் வங்கி மூலம் செய்யப்படும் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் ஈஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு செல்லுபடியாகும். மற்ற எல்லா ஸ்மார்ட்போன்களுக்கும் 10 சதவிகிதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

இப்போது விலைகுறைக்கப்பட்ட போக்கோ ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.
3 ஜிபி ரேம் கொண்ட போக்கோ சி 2 ஸ்மார்ட்போனுக்கு ரூ.500 விலைகுறைக்கப்பட்டு ரூ.7,499-க்கு விற்கப்படும்.
64 ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம் 2 ஸ்மார்ட்போனுக்கு ரூ.500 விலைகுறைக்கப்பட்டு ரூ.10,499-க்கு விற்கப்படும்.
128 ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம் 2 ஸ்மார்ட்போனுக்கு ரூ.1000 விலைகுறைக்கப்பட்டு ரூ.11,499-க்கு விற்கப்படும்.
4 ஜிபி ரேம் கொண்ட எம் 2 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ.1000 விலைகுறைக்கப்பட்டு ரூ.12,999-க்கு விற்கப்படும்.
6 ஜிபி ரேம் கொண்ட எம் 2 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ.1000 விலைகுறைக்கப்பட்டு ரூ.13,999-க்கு விற்கப்படும்.
64ஜிபி மெமரி கொண்ட போக்கோ எக்ஸ் 2 ஸ்மார்ட்போனுக்கு ரூ.1000 விலைகுறைக்கப்பட்டு ரூ.16,499-க்கு விற்கப்படும்.
128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எக்ஸ் 2 ஸ்மார்ட்போனுக்கு ரூ.1000 விலைகுறைக்கப்பட்டு ரூ.17,499-க்கு விற்கப்படும்.


Click it and Unblock the Notifications