Home
Mobile

பிளிப்கார்ட் தளத்தில் இந்த 5 மோட்டோ ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாதா ஆபர்கள்.!

கடந்த நவம்பர் 8-ம் தேதி துவங்கிய பிளிப்கார்ட்டின் இரண்டாவது பிக் தீபாவளி விற்பனையில் ஸ்மார்ட்போன், லேப்டாப், கேமரா என பல்வேறு பொருட்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிறப்பு விற்பனை வரும் நவம்பர் 12-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த மோட்டோ ஸ்மார்ட்போனை நீங்கள்

இந்த சிறப்பு விற்பனையில் மோட்டோரோலா நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் வாங்க முடியும்.மேலும் இந்த பிளிப்காரட் விற்பனையின் போது மோட்டோரோலா ரேஸர் ஸ்மார்ட்போனை தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் வழியாக ரூ.10,000 உடனடி தள்ளுபடியுடன் வாங்கலாம். அதாவது ரூ.74,999 க்கு இந்த மோட்டோ ஸ்மார்ட்போனை நீங்கள் வாங்க முடியும்.

மோட்டோ ஜி 9

இந்த சிறப்பு விற்பனையில் மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி 9 மாடலானது ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கும். குறிப்பாகஇந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த மென்பொருள் மற்றும் கேமராக்கள் வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கமான விலையை

அதேபோல் பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் பிளஸ் மாடலானது ரூ.16,499 க்கு வாங்க கிடைக்கும். பின்பு மோட்டோ இ 7 பிளஸ் ஸ்மார்ட்போன் அதன் வழக்கமான விலையை விட குறைவாக வாங்க கிடைக்கும், அதாவது ரூ.8,999-க்கு விற்பனையாகும்.

 மோட்டோ எட்ஜ் பிளஸ்

இந்த சிறப்பு விற்பனையில் மோட்டோ எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.64,999 க்கு வாங்க கிடைக்கும். கண்டிப்பாக மோட்டோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது, எனவே பிளிப்கார்ட் தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் அதிகளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

 ஜி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ஆனது

மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் மேக்ஸ் விஷன் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2400 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 ஜி பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மோட்டோரோலா மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் மாடலில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும். விரைவில் 6ஜிபி ரேம் கொண்ட மாடலையும் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் என்று கூறப்படுகிறது.

னவே சார்ஜ் பற்றிய

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் மாடலில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 20வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த சாதனம் Volcanic Grey மற்றும் Frosted Silver நிறங்களில் வெளிவந்துள்ளது.

 / ஜி / என், புளூடூத் 5.0,

வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 5.0, ஜிபிஎஸ், க்ளோனாஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் டூயல் சிம் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன். மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை ஐரோப்பாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த சாதனம் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.26,150-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Flipkart Big Diwali Sale: Discounts on Moto G9, Moto Razor And More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X