அள்ளிக்கோங்க.. 33W சார்ஜிங்.. 128ஜிபி மெமரி.. கிடுகிடுவென குறைந்த Redmi 5G போனின் விலை.. எந்த மாடல்?
பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல் (Flipkart Big Diwali sale) எனும் சிறப்பு விற்பனையில் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கிறது. குறிப்பாக ஒரு நல்ல 5ஜி போனை வாங்க நினைக்கும் பயனர்கள் இந்த பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையைப் பயன்படுத்துவது நல்லது.
அதேபோல் பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 22 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது முன்பு ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட தள்ளுபடி மூலம் இந்த ரெட்மி நோட் 12 5ஜி போனை ரூ.15,499 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 உடனடி தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ரெட்மி நோட் 12 5ஜி போனின் அம்சங்களைப் பார்ப்போம்.
ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன் 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. 1080×2400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளிட்ட டிஸ்பிளே அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த போன். குறிப்பாக பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 சிப்செட் வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த போன் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் மேலும் MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.
இந்த ரெட்மி நோட் 12 5ஜி 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது . மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸமார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல அசத்தலான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.

வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் இந்த போனின் எடை மிகவும் குறைவு. குறிப்பாக அனைத்து சிறப்பு அம்சங்களுடன் கம்மி விலையில் இந்த ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.
மேலும் இந்த ஆண்டு இறுதியில் பல அசத்தலான 5ஜி போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது ரெட்மி நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போனுக்கும இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications