இன்றே கடைசி.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. மலிவு விலையில் சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல் 2023 எனும் சிறப்பு விற்பனை இன்றுடன் நிறைவுபெறுகிறது. எனவே கம்மி விலையில் ஸ்மார்ட்போன்களை வாங்க நினைக்கும் பயனர்கள் இன்று பிளிப்கார்ட் தளத்தில் வாங்குவது நல்லது. அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் அட்டகாசமான சாம்சங் 5ஜி போன் கம்மி விலையில் கிடைக்கிறது.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 34 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனை ரூ.11,490 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் கூடுதலாக 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். இப்போது சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

இந்த சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி ஸ்மார்ட்போன் 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் போனின் டிஸ்பிளே. குறிப்பாக பெரிய டிஸ்பிளே என்பதால் இதைப் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
இந்த சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி ஸ்மார்ட்போன் எக்ஸிநோஸ் 1330 சிப்செட் வசதியை அடிப்படையாகக் கொண்டுவெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் வழங்கும். அதேபோல் OneUI சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா சென்சார் +2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி போன். எனவே இந்த போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய போன்.
6000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ செய்ய முடியும். அதேபோல் கைரேகை ஸ்கேனர் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.2,ஜிபிஎஸ், யுஎஸ்எபி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எப்14 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் பர்பில், கிரீன், பிளாக் நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும். அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட்போனின் எடை 205 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.
அசத்தலான அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி (SAMSUNG Galaxy F14 5G) கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். அதேபோல் சாம்சங் நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை கம்மி விலையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது.


Click it and Unblock the Notifications








