பிளிப்கார்ட், அமேசான் தளங்களில் தீபவாளி ஆஃபர்.! கம்மி விலையில் ஸ்மார்ட்போன் விற்பனை.!

|

இப்போது அமேசானின் கிரேட் இந்திய் ஃபெஸ்டிவல் விற்பனையும், பிளிப்கார்ட்டின் Big Diwali sale விற்பனையும் சூடுபிடித்துள்ளன என்று தான் கூறவேண்டும். அதன்படி இந்த இரண்டு தளங்களிலும் நடைபெறும் சிறப்பு விற்பனையின் மூலம் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை வாங்க முடியும்.

தவிர இந்த சிறப்பு விற்பனையின்

நீங்கள் முதல் இரண்டு சுற்றுகளை தவறவிட்டால் கவலை வேண்டாம், பண்டிகை கால விற்பனையின் சமீபத்திய பதிப்பு புதிய ஸ்மார்ட்போனை தள்ளுபடி விலையில் வாங்க இன்னும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. மேலும் தள்ளுபடிகளை தவிர இந்த சிறப்பு விற்பனையின் கீழ் எக்ஸ்சேன்ஜ் ஆபர்கள், குறிப்பிட்ட வங்கிகளின் மீதான கேஷ்பேக் சலுகைகள், நோ காஸ்ட் இ.எம்.ஐ விருப்பங்களும் கிடைக்கிறது.

 விவரங்களை சற்று விரி

இப்போது பிளிப்கார்ட்டின் Big Diwali sale 2020 விற்பனையின் பட்டியலிடப்பட்டுள்ள பிரபலமான நிறுவனங்களின் மொபைல் போன்களின் மீதான சிறந்த சலுகைகளின் விவரங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

89 நாட்கள் செல்லுபடியாகும் Vi ஆட் ஆன் திட்டங்கள்- விலை விவரங்கள்!

ஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ

ஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ

ஆப்பிளின் ஐபோன் 11 ப்ரோ ஆனது பிளிப்கார்ட் Big Diwali sale 2020 எனும் சிறப்பு விற்பனையில் ரூ.79,999-க்கு (எம்ஆர்பி ரூ.1,06,600) வாங்க கிடைக்கும். மேலும் உங்களது பழைய செல்போனை மாற்றி இந்த போனை வாங்கினால் ரூ.14,350 வரை தள்ளுபடியை பிளிப்கார்ட் கொடுக்கிறது.

ஐபோன் எக்ஸ்ஆர்

ஐபோன் எக்ஸ்ஆர்

ஆப்பிளின் ஐபோன் எக்ஸ்ஆர் ஆனது பிளிப்கார்ட் Big Diwali sale 2020 எனும் சிறப்பு விற்பனையில் ரூ.39,999-க்கு (எம்ஆர்பி ரூ.52,500) வாங்க கிடைக்கும். மேலும் பழைய செல்போனை மாற்றி இந்த போனை வாங்கினால் ரூ.14,350 வரை தள்ளுபடி பெறலாம். ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர் சாதனம் 6.1-இன்ச் ரெடினா லிக்விட் டிஸ்பிளே, ஏ12 பயோனிக் சிப்செட், 12எம்பி ரியர் கேமரா, 7எம்பி செல்பீ கேமரா உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்

சாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஆனது பிளிப்கார்ட் Big Diwali sale 2020எனும் சிறப்பு விற்பனையில் ரூ.59,999-க்கு (எம்ஆர்பி ரூ.85,000) வாங்க கிடைக்கும். மேலும் பழைய போனுக்கு எக்ஸ்சேஞ்சில் ரூ.14,850 வரை பிளிப்கார்ட் தள்ளுபடி அளிக்கிறது. விலை இல்லா இ.எம்.ஐ விருப்பமும் உள்ளது. இந்த சாதனம் 12ஜிபி ரேம் மற்றும் 25ஜிபி மெமரி வசதியை கொண்டது.

சாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ்

சாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ்

சாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.49,999-விலையில் வாங்க முடியம். மேலும் உங்களது பழைய செல்போன் பரிமாற்றத்தில் ரூ.14,850 வரை தள்ளுபடியை பிளிப்கார்ட் கொடுக்கிறது. குறிப்பிட்ட விலைக்கு 8ஜிபி ரேம் மற்றும் 12ஜிபி சேமிப்பு மாடலைப் பெறமுடியும்.

 போக்கோ எம்2 ப்ரோ

போக்கோ எம்2 ப்ரோ

போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை பிளிப்கார்ட் Big Diwali sale 2020 எனும் சிறப்பு விற்பனையில் ரூ.12,999-க்கு (எம்ஆர்பி ரூ.16,999) வாங்க முடியும். மேலும் இது ஆன்லைனின் அதன் வழக்கமான விற்பனை விலையை விட 2000 குறைவாகும். ரூ.12,240 வரை எக்ஸச்சேஞ்ச் ஆஃபர் பெறலாம்.

ரெட்மி நோட் 8

ரெட்மி நோட் 8

ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் மாடலை பிளிப்கார்ட் Big Diwali sale 2020 எனும் சிறப்பு விற்பனையில் ரூ.11,499-க்கு (எம்ஆர்பி ரூ.12,999) வாங்க முடியும். மலிவு விலையில் சிறந்த ஸ்மார்ட்போன் வாங்க விரும்பும் நபர்களுக்கு இது சரியான தேர்வு.

மோட்டோ ஜி9

மோட்டோ ஜி9

மோட்டோ ஜி9 ஸ்மார்ட்போன் மாடலை பிளிப்கார்ட் Big Diwali sale 2020எனும் சிறப்பு விற்பனையில் ரூ.9,999-க்கு (எம்ஆர்பி ரூ.14,999) வாங்க முடியும். குறிப்பாக 5000எம்ஏஎச் பேட்டரி, 48எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ரியல்மி சி11

ரியல்மி சி11

ரியல்மி சி11 ஸ்மார்ட்போன் மாடலை இப்போது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.6,499-விலையில் வாங்க முடியும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது. மேலும் 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் அமேசான் தளங்களிலும் நிறைய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Flipkart Big Diwali Sale 2020, Amazon Great Indian Festival Best Offers on Smartphones: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X