கொஞ்சம் பொறுங்க மக்களே.. சோனி கேமரா.. கம்மி விலையில் விற்பனைக்கு வரும் Poco 5ஜி போன்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் சேல் (Flipkart Big Billion Days Sale) எனும் சிறப்பு விற்பனை வரும் செப்டம்பர் 23-ம் தேதி தொடங்குகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்கள் போன்கள் கம்மி விலையில் வாங்க கிடைக்கும். அதேபோல் மிகவும் அதிகம் எதிர்பார்த்த போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி மாடலும் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும்.
அதாவது தற்போது போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி மாடல் ரூ.23,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கும் சிறப்பு விற்பனையில் இந்த போன் ரூ.20,000-க்கு கீழ் வாங்க கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ரூ.18,999 அல்லது ரூ.19,999 விலையில் இந்த போன் வாங்க கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Poco X7 Pro 5G specifications): 6.73-இன்ச் 1.5கே பிளாட் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது இந்த புதிய போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 240ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 3200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்,கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 8400 அல்ட்ரா சிப்செட் உடன் இந்த போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் ஹைப்பர்ஓஎஸ் 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்தது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
50மெகாபிக்சல் சோனி LYT-600 ப்ரைமரி சென்சார் + 8மெகாபிக்சல் அல்ட்ராவைடு என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இதில் உள்ளன.
மோஷன் டிராக்கிங் போகஸ் (Motion Tracking Focus), மோஷன் கேப்ச்சர் (Motion Capture), டைனாமிக் ஷாட்ஸ்
(Dynamic Shots) போன்ற பீச்சர்கள், 4K வீடியோ ரெக்கார்டிங் உள்ளிட்ட பல அம்சங்களுடன் இந்த போக்கோ போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போனின் மூலம் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
6550mAh பேட்டரியைக கொண்டுள்ளது போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. போக்கோ நிறுவனத்தின் கூற்றுப்படி இது 47 நிமிடங்களில் பூஜ்ஜியத்திலிருந்து ஸ்மார்ட்போனின் பேட்டரியை பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவிகிதம் சார்ஜ் செய்யும்.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த போன் வாங்க கிடைக்கும். மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாதனத்தில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் கம்மி விலையில் கிடைக்கும் என்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








