Home
Mobile

Flipkart Big Billion Days Sale: தரமான ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.!

வரும் செப்டம்பர் 29-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் Flipkart Big Billion Days Sale எனும் தலைப்பில் ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விலைகுறைப்பு சலுகை வரும் அக்டோபர் மாதம் 4-ம் தேதி வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நல்ல நல்ல ஸ்மார்ட்போன்களை இந்த விலைகுறைப்பு சலுகையில் வாங்கலாம்.

ஷாப்பிங் திருவிழா

மொபைல்கள், லேப்டாப், வீட்டு உபகரணங்கள், கேமராக்கள், காலணிகள், புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைஇந்த சிறப்பு விற்பனையில் குறைந்த விலையில் வாங்க முடியும். குறிப்பாக Flipkart Big Billion Days Sale ஷாப்பிங் திருவிழா உண்மையிலேயே மறக்கமுடியாத வகையில் தரமான சலுகைகளை வழங்க உள்ளது.

Flipkart Big Billion Days Sale விற்பனையில் சாதனங்களுக்கு விலைகுறைப்பு சலுகையுடன் எக்சேஞ்ச் வசதி, தேர்வு செய்த வங்கி கார்டுகளை பயன்படுத்தும்போது உடனடி தள்ளுபடி, கேஷ்பேக் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. மேலும் இந்த சிறப்பு விற்பனையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எக்சேஞ்ச் வசதி

எக்சேஞ்ச் வசதி
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையில் உங்கள் பழைய ஸ்மார்ட்போனை கொடுத்து எக்சேஞ்ச் வசதியை பயன்படுத்தலாம். குறிப்பாக ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.2000-க்கும் மேல் எக்சேஞ்ச் வசதி வழங்கப்படுகிறது. எனவே
உங்கள் பழையபோனை மற்ற இதுவே சரியான தருனம். மேலும் இந்த சலுகையில் புதிய ஸ்மார்ட்போன்களை வாரன்டியுடன் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

முழுமையான மொபைல் பாதுகாப்பு
பிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ள தகவலின்படி உங்கள் ஸ்மார்ட்போனில் மென்பொருள் மற்றும் வன்பொருள் போன்றவைகளில் ஏதேனும் சேதங்கள் ஏற்பட்டால், பிளிப்கார்ட் பிரதிநிதி அதை சரிசெய்ய உங்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார். பின்பு இதன் மூலம் குறைந்த செலவில் நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனை சரிசெய்ய முடியும். அதன்பின்பு பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது வாங்கும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் 40 சதவீதம் உத்தரவாதம் வழங்கப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

card-less credit service

உங்களிடம் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு இல்லையா, கவலைப்பட வேண்டாம், பிளிப்கார்ட் நிறுவனம் உங்களுக்கு வேண்டி ஒரு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது, card-less credit service எனும் வசதி அடிப்படையில் நீங்கள் 1லட்சம் வரை கடன்பெற்று பொருட்களை வாங்கலாம், பிளிப்கார்ட்டில் கடன் பெற KYC ஐ நீங்கள் முடிக்க வேண்டும். இப்போது, நீங்கள் சிறிது நேரம் கவனித்த ஸ்மார்ட்போனை எந்த நேரத்தையும் வீணாக்காமல் வாங்கலாம்.

ரியல்மி-சியோமி-சாம்சங்

ரியல்மி-சியோமி-சாம்சங்

தி பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையில் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமல்ல, இடைப்பட்ட மற்றும் பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விலைகுறைப்பில் வரும் ஸ்மார்ட்போன்களை நாங்கள் இப்போது பட்டியலிடுகிறோம். ரியல்மி 5, ரியல்மி எக்ஸடி, ரியல்மி எக்ஸ், ரியல்மி 3ஐ, ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ.8,999, ரூ.15,999, ரூ.15,999, ரூ.7,999 என்ற விலைகளில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி 5:
ரியல்மி 5 ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.10,999-ஆக இருக்கிறது, இந்த பிளிப்கார்ட் விலைகுறைப்பின் மூலம் ரூ.8,999 விலையில் பெறமுடியும். குறிப்பாக ஸ்னாப்டிராகன் 665எஸ்ஒசி, சிப்செட்,எச்டி பிளஸ் பெரிய டிஸ்பிளே, 5000எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம்.

ரியல்மி 5 ப்ரோ:
48எமபி கேமரா கொண்ட ரியல்மி 5ப்ரோ ஸ்மார்ட்போனுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி ரியல்மி 5ப்ரோ சாதனத்தின் உண்மை விலை ரூ.14,999-ஆக இருக்கிறது, பிளிப்கார்ட்டில் 29-ம் தேதிநடைபெறும் சிறப்பு சலுகையின் மூலம் ரூ.1000குறைக்கப்படும், பின்பு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்த இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.1,000-வரை குறைக்கப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் சிறப்புவிற்பனையில் ரூ.12,999- விலையில் வாங்க முடியும்.

மேலும் ரெட்மி நோட் 7ப்ரோ, ரெட்மி நோட் 7எஸ், ரெட்மி 7ஏ,ரெட்மி கே20, ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ.11,999, ரூ.8,999, ரூ.4,999, ரூ.19,999, ரூ.24,999-விலையில் வாங்க முடியும்.

சிறப்பு விற்பனையில் வரும் சியோமி போன்கள்
சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸமார்ட்போன் ஆனாது 48எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு பின்பு 6.3-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே, ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 660சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். இந்த சாதனத்தின் உண்மை விலை ரூ.15,999-ஆக உள்ளது. ஆனால் விலைகுறைப்பின் மூலம் ரூ.10,999-விலையில்இந்த ஸமார்ட்போனை வாங்கலாம்

ரெட்மி நோட் 7எஸ்
பிளிப்கார்ட் விலைகுறைப்பில் சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 7 தொடர் ஸ்மார்ட்போன் அதிகமாக இடம்பெற்றுள்ளது, குறிப்பாக ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன் மாடல் 48எம்பி பிரைமரி கேமரா மற்றும் 5எம்பி டெப்த் சென்சார் இடம்பெற்றுள்ளது, மேலும் சிறந்த மென்பொருள் அமைப்புடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.11,999-ஆக இருக்கிறது,பிளிப்கார்ட் விலைகுறைப்பின் மூலம் ரூ.8,999-விலையில் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு 50சதவிகிதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி கேலக்ஸி எஸ9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.29,999 மற்றும் 34,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சாம்சங் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்ப அறிவிக்கப்பட்டுள்ளது.

விவோ ஸ்மார்ட்போன்களுக்கும் விலைகுறைப்பு
பிளிப்கார்ட் நிறுவனத்தின் சிறப்பு விற்பனையில் விவோ ஸ்மார்ட்போன்களுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது,அதன்படி விவோ இசெட்1ப்ரோ ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.14,990-ஆக இருக்கிறது, ஆனால் இந்த விலைகுறைப்பின் மூலம் ரூ.12,990-க்கு விற்பனை செய்யப்படும். மேலும் ஸ்னாப்டிராகன்712சிப்செட், 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். பின்பு விவோ இசெட்1எக்ஸ் ஸ்மார்ட்போனுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட்டில் பிரத்தியேக ஸ்மார்ட்போன்
ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களால் நீண்ட காலமாக விரும்பப்படும் சந்தையாக பிளிப்கார்ட் உள்ளது. நீங்கள் நம்பகமான தளத்தைப் பெறுகிறீர்கள், அது பரந்த அளவிலான தயாரிப்புகளைக் கொண்டுள்ளது மற்றும் அதிக எண்ணிக்கையிலான ஸ்மார்ட்போன்களைக் கொண்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களில், பிளிப்கார்ட்டில் பிரத்தியேக ஸ்மார்ட்போன் அறிமுகங்களின் எண்ணிக்கை நாட்டின் வேறு எந்த இ-காமர்ஸ் தளங்களுடனும் ஒப்பிடும்போது அதிகமாகும்.


கடந்த மூன்று மாதங்களில் 7000 விலை பிரிவில் சுமார் 5 ஸ்மார்ட்போன்கள் பிளிப்கார்ட்டில் அறிமுகப்படுத்தப்பட்டன, மற்ற முன்னணி தளங்களில் ஒன்று மட்டுமே இருந்தது. இடைப்பட்ட பிரிவில் (10000 -15000) பிளிப்கார்ட்டுக்கு எண்ணிக்கை 15 ஆகும், அதன் போட்டியாளர்களை விட கிட்டத்தட்ட 80% அதிகம்.

பிளிப்கார்ட் நிறுவனம்

பிளிப்கார்ட் நிறுவனம்

ரியல்ம், அசுஸ், கூகுள், லெனோவா மோட்டோரோலா, விவோ மற்றும் நுபியா போன்ற சில முக்கிய நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை பிளிப்கார்ட்டில் மட்டுமே வெளியிட்டனர். பிளிப்கார்ட்டில் (பிராண்ட் வாரியாக) வந்த
ஸ்மார்போன்களைப் பார்க்கலாம்

ரியல்மி: ரியல்மி சி2, ரியல்மி 3,ரியல்மி 3ப்ரோ, ரியல்மி எக்ஸ், ரியல்மி எக்ஸ்டி, ரியல்மி 5, ரியல்மி 5ப்ரோ

ரெட்மி: ரெட்மி 7ஏ, ரெட்மி நோட் 7எஸ், ரெட்மி நோட் 7ப்ரோ, ரெட்மி கே20, கே20 ப்ரோ,

கூகுள்: பிக்சல் 3ஏ

விவோ: விவோ இசெட்1 ப்ரோ, விவோ இசெட்1எக்ஸ்

மோட்டோரோலா: மோட்டோரோலா ஒன் ஆக்ஷன், மோட்டோரோலா இ6எஸ்

ஹனார்: ஹனார் 20ஐ

அசுஸ்: அசுஸ் 6இசெட், ரோக் 2

நுபியா: ரெட்மி மேஜிக் 3

ஒப்போ: ரெனோ 2

ஸ்மார்ட்போன் அறிமுகங்களின் அடிப்படையில் பிளிப்கார்ட் மற்ற இ-காமர்ஸ் இயங்குதளங்களை விட அதிகமாகவே அறிமுகம்செய்கிறது. குறிப்பாக பண்டிகை காலங்கள் துவங்கி விட்டதால் பிளிப்கார்ட் நிறுவனம் இன்னும் நிறைய சலுகைகளை வழங்கும்என எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
Flipkart Big Billion Days Sale: One-Stop Destination To Buy Smartphones This Season: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X