ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் சேல் : குறைந்தை விலையில் லேப்டாப் & ஸ்மார்ட்போன்கள்.!
எக்ஸ்சேஞ் ஆபர், நோ காஸ்ட் ,எம்ஐஇ கியாரன்டி மற்றும் பை நவ் பே லேட்டர் ஆகிய சிறப்பு சலுகைகளை எஸ்பிஐ வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் அட்டை பயனர்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ஃபிளிப்கார்ட் வழங்கும் பிக் பில்லியன் டே சேல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வீட்டு உபயோக பொருட்கள், பேஷன் ஆடைகள், ஆபரணங்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடி விலையில் வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்சேஞ் ஆபர், நோ காஸ்ட் ,எம்ஐஇ கியாரன்டி மற்றும் பை நவ் பே லேட்டர் ஆகிய சிறப்பு சலுகைகளை எஸ்பிஐ வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் அட்டை பயனர்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹவாய், சாம்சங், மோட்டோ, ஆசஸ், மைக்ரோமேக்ஸ், பானாசோனிக், இன்பினிக்ஸ் போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் குறைந்த விலையில் லேப்டாப் போன்ற பொருட்களையும் வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹவாய் பி9:
ஹவாய் பி9 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.39,999ஆக இருந்தது. இப்போது ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் சேல் விலை குறைப்பு ஆபர் மூலம் ரூ.14,999-க்கு ஹவாய் பி9 ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

சியோமி:
சியோமி ரெட்மி ஏ1 விலைப் பொறுத்தவரை ரூ.6,999-க்கு விற்பனை செய்யப்படும், சியோமி ரெட்மி 4ஏ ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டு ரூ.14,999-க்கு விற்பனை செய்யப்படும்.

பானாசோனிக் பி85:
பானாசோனிக் பி85 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.6,499ஆக இருந்தது, இந்த ஸ்மார்ட்போனுக்கு விலைக் குறைக்கப்பட்டு ரூ.4,999க்கு விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்ப்பட்டுள்ளது.

இன்பினிக்ஸ் 4 ப்ரோ:
இந்த இன்பினிக்ஸ் 4 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.1000 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.6,499-க்கு விற்பனை செய்யப்படும். மேலும் பலசெயல் திறன்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஏசர் பிரிடேட்டர்:
ஏசர் பிரிடேட்டர் பொதுவாக ஹீலியோஸ் 300 கோர் ஐ7 மற்றும் 7வது தலைமுறையைக் கொண்டுள்ளது. அதன்பின்பு இந்த லேப்டாப் முந்தைய விலைப் பொறுத்தவரை ரூ.1,09,990ஆக இறுந்தது, இப்போது விலைக்குறைக்கப்பட்டு ரூ.50,990க்கு விற்பனை செய்யப்படும்.


Click it and Unblock the Notifications