Flipkart Big Billion Days Sale: குறைந்த விலையில் ரியல்மி 5G போன்களை வாங்க சரியான நேரம்.!
இந்திய மக்கள் மிகவும் அதிகம் எதிர்பார்த்த Flipkart Big Billion Days எனும் சிறப்பு விற்பனை வரும் செப்டம்பர் 23-ம் தேதி தொடங்கும். அதேபோல் இந்த சிறப்பு விற்பனை வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட்
குறிப்பாக பிளிப்கார்ட் தளத்தில் வரும் 23-ம் தேதி நடைபெறும் சிறப்பு விற்பனையில் பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, டேப்லெட், லேப்டாப் உள்ளிட்ட பல சாதனங்களுக்கு சலுகைகள் வழங்கப்படும்.

10% உடனடி தள்ளுபடி
குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் ICICI வங்கி மற்றும் Axis வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி போன்களை வாங்கினால் 10% உடனடி தள்ளுபடியைப் பெறமுடியும். மேலும் வரவிருக்கும் Flipkart Big Billion Days எனும் சிறப்பு விற்பனையில் ரியல்மி நிறுவனம் வழங்கும் சலுகைகளை இப்போது பார்ப்போம்.

ரியல்மி 9 5ஜி Speed Edition
பிளிப்கார்ட் தளத்தில் வரவிருக்கும் சிறப்பு விற்பனையில் ரியல்மி 9 5ஜி Speed Edition போனைரூ.14,999-விலையில் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரியல்மி 9 5ஜி Speed Editionஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது.
மேலும்ரியல்மி 9 5ஜி Speed Edition ஆனது ஸனாப்டிராகன் 778ஜி பிராசஸர், 48எம்பி ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா,5000 எம்ஏஎச் பேட்டரி, 30 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி ஜிடி நியோ 3டி
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Realme GT Neo 3T ஸ்மார்ட்போன் முதல் முறையாக Flipkart Big Billion Days Sale-இல் விற்பனைக்கு வருகிறது. மேலும் இந்த சிறப்பு விற்பனையில் ஐசிஐசிஐ அல்லது ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ரியல்மி ஜிடி நியோ 3டி போனை வாங்கினால் ரூ.7000 தள்ளுபடியை பெறமுடியும்.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி ஜிடி நியோ 3டி போனின் விலை ரூ.22,999-க்கும், 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் ரூ.24,999-க்கும் கிடைக்கும். மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி ஜிடி நியோ 3டி போனின்
விலை ரூ.26,999-ஆக உள்ளது.

ரியல்மி ஜிடி நியோ 3டி அம்சங்கள்
ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போன் 6.62-இன்ச் AMOLED டிஸ்பிளே மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. மேலும் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட், 64எம்பி ரியர் கேமரா,16எம்பி செல்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, 80 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது ஜிடி நியோ 3டி போன்.

ரியல்மி 9 ப்ரோ 5ஜி
Realme 9 Pro 5G ஸ்மார்ட்போன் ரூ.17,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் பிள்ப்கார்ட் சிறப்பு விற்பனையில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி ரூ.14,999-விலையில் இந்த ரியல்மி 9 ப்ரோ 5ஜி போனை வாங்க முடியும்.
ரியல்மி 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே,120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 64எம்பி ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா,5000 எம்ஏஎச் பேட்டரி,33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரியல்மி போன்.

ரியல்மி ஜிடி 2 ப்ரோ
பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கும் சிறப்பு விற்பனையில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனைவாங்கும் பயனர்கள் ரூ.10,000 வரை தள்ளுபடி பெறமுடியும்.
இந்த ரியல்மி ஸ்மாரட்போன் 6.7-இன்ச் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட், 50எம்பி ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, 65 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் போன்கள்
பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் நாம் அதிகம் எதிர்பார்த்த பட்ஜெட் போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ரியல்மி சி33, ரியல்மி சி35, ரியல்மி 9,ரியல்மி சி30, ரியல்மி 9ஐ,ரியல்மி 9 5ஜி போன்ற ஸ்மார்ட்போன்களை மிகவும் கம்மி விலையில் வாங்க முடியும்என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications