Home
Mobile

அடேய் Flipkart.. நானே இவ்ளோ கம்மியா விக்க மாட்டேன்.. 2 Google Pixel போன்கள் மீது மரண ஆஃபர்!

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது, ஐபோன்கள் மீது கிடைக்கும் ஆபர்களை விட கூகுள் பிக்சல் போன்கள் மீது கிடைக்கும் ஆபர்கள் மீது தான் உங்களுக்கு அதிக ஆர்வம் உள்ளதென்றால்.. கவலையை விடுங்கள் நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்.

ஏனென்றால்.. ஏற்கனவே தொடங்கிவிட்ட.. வருகிற அக்.15 வரை நடக்க உள்ள பிளிப்கார்ட்டின் பண்டிகை கால சிறப்பு விற்பனையான பிக் பில்லியன் டேஸின் போது பிக்சல் 7 ப்ரோ மற்றும் பிக்சல் 7ஏ மீது கிடைக்கும் அபார தள்ளுபடி மற்றும் சலுகைகளை பற்றிய கட்டுரையே இது!

2 Google Pixel போன்கள் மீது மரண ஆஃபர்!

கூகுள் பிக்சல் 7 ப்ரோ (Google Pixel 7 Pro) மீதான தள்ளுபடி: கடந்த ஆண்டு நடைபெற்ற மேட் பை கூகுள் 2022 ஹார்டுவேர் வெளியீட்டு நிகழ்வின் போது அறிமுகப்படுத்தப்பட்ட கூகுள் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது நம்ப முடியாத தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும்.

அறிமுகத்தின் போது பிக்சல் 7 ப்ரோவின் விலை நிர்ணயம் ரூ.84,999 ஆக இருந்தது. பின்னர் மெல்ல மெல்ல இதன் விலை குறைக்கப்பட்டு ரூ. 63,999 க்கு இறங்கி வந்தது. தற்போது பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது இது ரூ.58,999 க்கு (வங்கி சலுகைகள் உட்பட) வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது; இந்த போனின் மீது ரூ.32,000 வரையிலான எக்ஸ்சேன்ஜ் போனஸும் கிடைக்கிறது.

அதாவது பிக்சல் 7 ப்ரோவின் விலை நிர்ணயமானது ரூ.60,000 க்குள் என்கிற பட்ஜெட்டிற்கு இறங்கி வந்துள்ளது. பிளிப்கார்ட்டின் இந்த அதிரடி தள்ளுபடியானது, ஏற்கனவே இதே விலைப்பிரிவின் கீழ் (அதாவது ரூ.60,000 க்குள் ) வாங்க கிடைக்கும், மற்ற நிறுவனங்களின் பிளாக்ஷிப் / ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களின் புறம்தள்ளும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

கூகுள் பிக்சல் 7ஏ (Google Pixel 7a) மீதான தள்ளுபடி: இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது வெறும் ரூ.31,499 க்கு வாங்க கிடைக்கும்.

நினைவூட்டும் வண்ணம் பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போன் ரூ.43,999 க்கு அறிமுகமானது.இந்த ஸ்மார்ட்போனின் விலையை நீங்கள் மேலும் குறைக்க விரும்பினால் வங்கி சலுகைகளை பயன்படுத்தலாம். மேலும் தகுதியான ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்வதன் மூலம் ரூ.30,600 வரையிலான எக்ஸ்சேன்ஜ் போனஸும் கிடைக்கும்.

பிக்சல் 7 ப்ரோ மற்றும் பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: பிக்சல் 7 ப்ரோ மற்றும் பிக்சல் 7ஏ ஆகிய இரண்டுமே ஆண்ட்ராய்டு 13 அவுட்-ஆஃப்-தி-பாக்ஸில் இயங்குகின்றன; மேலும் இவைகளை ஆண்ட்ராய்டு 14க்கும் மேம்படுத்தலாம்.

இரண்டு ஸ்மார்ட்போன்களுமே கூகுளின் சொந்த டென்சர் ஜி2 சிப்செட் மூலம் இயக்கப்படுகின்றன. மேலும் இந்த இரண்டு பிக்சல் போன்களுமே 12ஜிபி வரையிலான ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளன. முக்கிய வேறுபாடுகளை பொறுத்தவரை ப்ரோ மாடலில் 120 ஹெர்ட்ஸ் 6.7 இன்ச் எல்டிபிஓ ஓஎல்இடி டிஸ்ப்ளே உள்ளது.

மறுகையில் உள்ள பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போனில் 90 ஹெர்ட்ஸ் 6.1 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே உள்ளது. பிக்சல் 7 ப்ரோவில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா + 30 எக்ஸ் சூப்பர் ரெசல்யூஷன் ஜூம் மற்றும் 5 எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 48 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது.

மறுகையில் உள்ள பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போனில் 64 மெகாபிக்சல் மெயின் கேமரா +13 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, ப்ரோ மாடலில் 10.8 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது, அதே நேரத்தில் பிக்சல் 7ஏ ,மாடலில் 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

ஸ்டோரேஜை பொறுத்தவரை, ப்ரோ மாடலில் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது, மறுகையில் உள்ள பிக்சல் 7ஏ மாடலில் 128ஜிபி ஸ்டோரேஜ் மட்டுமே கிடைக்கும். இரண்டு மாடல்களிலும் ஃபேஸ் அன்லாக் ஆதரவுடன் பயோமெட்ரிக் அன்லாக்கிங்கிற்கான இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு போன்களுமே வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் பாஸ்ட் வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கின்றன.கூகுள் நிறுவனத்தின் கூற்றுப்படி, எக்ஸ்ட்ரீம் பேட்டரி சேவர் மோட் (Extreme Battery Saver mode ) இயக்கப்பட்டிருக்கும் போது இவைகள் 72 மணிநேரம் வரையிலான பேட்டரி லைஃப்பை வழங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart Big Billion Days Sale Google Pixel 7 Pro Available Under Rs 60000 Pixel 7a For Rs 31499
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X