பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2026.. ரூ.20,000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த 5ஜி போன்கள்.. இதோ பட்டியல்!
பிளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் சேல் 2026(Flipkart's Big Billion Days Sale 2026) எனும் சிறப்பு அக்டோபர் 9-ம் தேதி தொடங்குகிறது. இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன், டிவி, டேப்லெட், லேப்டாப், ஸ்பீக்கர்கள் என பல சாதனங்கள் தள்ளுபடி விலையில் கிடைக்க உள்ளன.
அதேபோல் புதிய ஸ்மார்ட்போன்களை வாங்க நினைக்கும் பயனர்கள் இந்த சிறப்பு விற்பனையை பயன்படுத்தி கம்மி விலையில் வாங்க முடியும். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் ரூ.20,000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இப்போது பார்க்கலாம்.

1.மோட்டோ ஜி36 பவர் (Moto G37 Power): இந்த மோட்டோ ஜி36 பவர் ஸ்மார்ட்போன் ரூ.17,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் இந்த மோட்டோ ஸ்மார்ட்போனை ரூ.16,999 விலையில் வாங்க முடியும். மீடியாடெக் டைமன்சிட்டி 6400 (MediaTek Dimensity 6400) சிப்செட் உடன் மோட்டோ ஜி36 பவர் போன் வெளியானது.
6.66-இன்ச் எச்டி எல்சிடி டிஸ்பிளே,50எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, டால்பி அட்மாஸ் (Dolby Atmos), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP64 ரேட்டிங், 7000எம்ஏஎச் பேட்டரி, 30W சார்ஜிங், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) போன்ற வசதிகளும் இந்த மோட்டோ போனில் உள்ளன.
2.ரியல்மி பி4ஆர் 5ஜி (Realme P4R 5G): பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் எனும் சிறப்பு விற்பனையில் ரியல்மி பி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.20,999 விலையில் விற்பனை செய்யப்படும். ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆகவே இந்த போனை ரூ.19,999 விலையில் வாங்கிவிட முடியும்.
ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட், 6.8-இன்ச் எல்சிடி டிஸ்பிளே, 50எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, IP65 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட், 8000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த ரியல்மி போன் வெளியானது.

3.போக்கோ எம்8எக்ஸ் 5ஜி (POCO M8x 5G): பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் தரமான போக்கோ எம்8எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.17,999 விலையில் வாங்க கிடைக்கும். ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 5 4என்எம் (Octa Core Qualcomm Snapdragon 4 Gen 5 4nm) சிப்செட் உடன் இந்த போக்கோ போன் வெளியானது.
அதேபோல் 6.9-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே, 50எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance), 7900எம்ஏஎச் பேட்டரி, 45W பாஸ்ட் சார்ஜிங், அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு போன்ற பல சிறப்பான அம்சங்கள் போக்கோ எம்8எக்ஸ் 5ஜி போனில் உள்ளன.
4.சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி (Samsung Galaxy F70e 5G): இந்த கேலக்ஸி எப்70இ 5ஜி ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் ரூ.16,999 விலையில் வாங்க கிடைக்கும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் கூடுதல் சலுகைகளும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட், 6.7 இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ், 6 வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட் ஆதரவு, 50எம்பி டூயல் ரியர் கேமராக்கள், 8எம்பி செல்பி கேமரா, 6000எம்ஏஎச் பேட்டரி, 25W சார்ஜிங் உள்ளிட்ட வசதிகளுடன் சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி போன் வெளிவந்தது.
5.ஓப்போ கே14எக்ஸ் 5ஜி (OPPO K14x 5G): பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் ஓப்போ கே14எக்ஸ் 5ஜி ரூ.16,999 விலையில் வாங்க கிடைக்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போன் தரமான ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் உடன் வெளியானது.

6.75 இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ், 50எம்பி டூயல் ரியர் கேமராக்கள், 5எம்பி செல்பி கேமரா, IP64 டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant), 6500எம்ஏஎச் பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் போன்ற அம்சங்கள் ஓப்போ கே14எக்ஸ் 5ஜி போனில் உள்ளன.
அதிக பேட்டரி திறன், பெரிய டிஸ்பிளே, நல்ல கேமரா மற்றும் வேகமான சார்ஜிங் வசதிகளை எதிர்பார்ப்பவர்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள போன்களில் தங்களுக்குப் பொருத்தமான மாடலை தேர்வு செய்யலாம். வங்கி கார்டு சலுகைகள் மற்றும் பிற தள்ளுபடிகளும் கிடைக்கக்கூடும் என்பதால், வாங்கும் முன் இறுதி விலை மற்றும் சலுகை விதிமுறைகளை சரிபார்ப்பது சிறந்தது.


Click it and Unblock the Notifications
