Home
Mobile

பாதிக்கு பாதி விலை.. Flipkart Big Billion Days Sale-ல் இந்த 4 போன்களையும் மிஸ் பண்ணிடாதீங்க!

Flipkart Mobile Offer: பண்டிகை காலத்தின் தொடக்கத்தை குறிக்கும் வகையில் இந்திய இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் நிறுவனமானது தனது வருடாந்திர சிறப்பு விற்பனையான பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2024-ஐ (Flipkart Big Billion Days Sale 2024) அறிவித்துள்ளது. இது பிளிப்கார்ட் பிளஸ் மெம்பர்களுக்கு (Flipkart Plus Members) செப்டம்பர் 26 ஆம் தேதி முதலும், அனைத்துப் பயனர்களுக்கும் செப்டம்பர் 27 ஆம் தேதி முதலும் தொடங்க உள்ளது.

இந்த விற்பனையின் போது, ​​ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், லேப்டாப்கள், ஸ்மார்ட்வாட்ச்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பலவற்றின் மீது மிகப்பெரிய தள்ளுபடிகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரை, இந்த விற்பனையின் போது கூகுள் பிக்சல் 8 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்23 போன்ற மாடல்கள் மீது முன்னெப்போதும் இல்லாத அளவில் மிகவும் மலிவான விலையில் வாங்க கிடைக்கும்.

Flipkart Big Billion Days Sale-ல் இந்த 4 போன்களையும் மிஸ் பண்ணிடாதீங்க

பிளிப்கார்ட் நிறுவனம் அதன் மொபைல் ஆப் வழியாக தள்ளுபடியில் கிடைக்கும் சில ஸ்மார்ட்போன்களின் விற்பனை விலையை டீஸ் செய்ய தொடங்கியுள்ளது. அதன் வழியாக கூகுள் பிக்சல் 8 ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.40,000 க்குள் வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.75,999 ஆகும்.

இதேபோல், சாம்சங் கேலக்ஸி எஸ்23 ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனும் கூட ரூ.40,000 க்குள் என்கிற விலையில் வாங்க கிடைக்கும். வழக்கமாக இது ரூ.89,999 க்கு வாங்க கிடைக்கும். இருப்பினும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் இறுதி ஆபர் விலையை பிளிப்கார்ட் இன்னும் வெளியிடவில்லை. அதாவது ரூ.40,000 க்குள் என்றால் சரியாக எவ்வளவு என்கிற விவரம் பகிரப்படவில்லை.

இதுதவிர்த்து பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது, சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ (Samsung Galaxy S23 FE) ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.30,000 க்குள் என்கிற விலைக்கு வாங்க கிடைக்கும். நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.79,999 ஆகும். இதேபோல போக்கோ எக்ஸ்6 ப்ரோ 5ஜி (Poco X6 Pro 5G) ஸ்மார்ட்போன் ரூ.20,000 க்குள் வாங்க கிடைக்கும் என்று டீஸ் செய்யப்படுகிறது.

மற்ற ஸ்மார்ட்போன்களின் விற்பனை விலைகள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், பிளிப்கார்ட் லிஸ்டிங் ஆனது சிஎம்எப் போன் 1 (CMF Phone 1), நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a), போக்கோ எம்6 பிளஸ் (Poco M6 Plus), விவோ டி3எக்ஸ் (Vivo T3X), இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ (Infinix Note 40 Pro) மற்றும் பல மாடல்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும் என்று உறுதிப்படுத்தியுள்ளது.

பிளிப்கார்ட் வழங்கும் தள்ளுபடிகளுக்கு மேல், கூடுதல் வங்கி சலுகைகளை பயன்படுத்தி கொள்ளும் விருப்பமும் வாடிக்கையாளர்களுக்கு இருக்கும். எச்டிஎப்சி வங்கியின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால் 10 சதவீதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும். மேலும் பிளிப்கார்ட் யுபிஐ (Flipkart UPI) மூலம் பரிவர்த்தனை செய்யும் போது ரூ.50 தள்ளுபடி கிடைக்கும்

வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது மிகப்பெரிய டிஸ்கவுண்ட்களை எதிர்பார்க்கலாம்? ஆப்பிளின் புதிய 1ஐபோன் 16 சீரீஸ் மாடல்கள் அறிமுகமாகி விட்டதால், ஐபோன் 15 (iPhone 15), ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus), ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max) ஆகிய 4 ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் மீதுமே முன் எப்போதும் இல்லாத அளவிலான டிஸ்கவுண்ட்களை எதிர்பார்க்கலாம். இதுதவிர்த்துசாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா, மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ, நத்திங் போன் 2ஏ போன்ற ஸ்மார்ட்போன்களும் நல்ல டிஸ்கவுண்ட் விலைக்கு வாங்க கிடைக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Best Mobiles in India

English summary
Flipkart Big Billion Days Sale 2024 Smartphone Offer Prices Revealed Before Start date Sep 26
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X