Home
Mobile

Flipkart பிச்சிக்க போகுது.. 1 இல்ல 2 இல்ல.. 6 Motorola போன்கள் மீது முரட்டு டிஸ்கவுண்ட்.. என்னென்ன மாடல்கள்?

Flipkart Big Billion Days Sale 2024: பிளிப்கார்ட் வலைதளத்தில் வருகிற செப் 26 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள பிக் பில்லியன் டேஸ் விற்பனையை முன்னிட்டு, இந்த சிறப்பு விற்பனையின் போது என்னென்ன மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள் மீது எவ்வ்ளவு நேராது தள்ளுபடி கிடைக்கும்? எவ்வளவு பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கும் என்கிற விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவைகளில் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ மாடல் மீது தான் மிகப்பெரிய தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதென்ன தள்ளுபடி? வேறு என்ன மாடல்கள் மீது சலுகைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது, மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ (Motorola Edge 50 Pro) ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் (125W சார்ஜர்) ரூ.35,999 க்கு பதிலாக வெறும் ரூ.27,999 க்கு (வங்கி சலுகைகள் உட்பட) வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

6 Motorola போன்கள் மீது முரட்டு டிஸ்கவுண்ட்.. என்னென்ன மாடல்கள்?

மோட்டோரோலா எட்ஜ் 50 ஃபியூஷன் (Motorola Edge 50 Fusion): இது அதன் அசல் விலையான ரூ.22,999 க்கு பதிலாக ரூ.20,999 என்கிற சலுகை விலையில் வாங்க கிடைக்கும். வங்கி தள்ளுபடியின் கீழ் மேலும் ரூ.1000 குறைத்து, இந்த ஸ்மார்ட்போனின் இறுதி ஆபர் விலையை ரூ.19,999 ஆக குறைக்க முடியும்.

மோட்டோ ஜி85 5ஜி (Moto g85 5G): இது அதன் அசல் விலையான ரூ.17,999 க்கு பதிலாக ரூ.16,999 என்கிற சலுகை விலையில் வாங்க கிடைக்கும். வங்கி தள்ளுபடியின் கீழ் மேலும் ரூ.1000 குறைத்து, இந்த ஸ்மார்ட்போனின் இறுதி ஆபர் விலையை ரூ.15,999 ஆக குறைக்க முடியும்.

மோட்டோ ஜி64 5ஜி (Moto g64 5G): இது அதன் அசல் விலையான ரூ.16,999 க்கு பதிலாக ரூ.14,999 என்கிற சலுகை விலையில் வாங்க கிடைக்கும். வங்கி தள்ளுபடியின் கீழ் மேலும் ரூ.1000 குறைத்து, இந்த ஸ்மார்ட்போனின் இறுதி ஆபர் விலையை ரூ.13,999 ஆக குறைக்க முடியும்.

Motorola Edge 50 Neo & Moto g04s (மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ மற்றும் மோட்டோஜி 04எஸ்): எட்ஜ் 50 நியோ மாடல் ஆனது அதன் அசல் விலையான ரூ.23,999 க்கு பதிலாக ரூ.22,999 என்கிற சலுகை விலையில் வாங்க கிடைக்கும். கடைசியாக உள்ள ஜி04எஸ் மாடல் ஆனது அதன் அசல் விலையான ரூ.7,499 க்கு பதிலாக ரூ.6,999 என்கிற சலுகை விலையில் வாங்க கிடைக்கும்.

மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தவரை, இது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்படையிலான ஹலோ யுஐ உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு 3 முக்கிய ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 4 ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்று மோட்டோரோலா நிறுவனம் வாக்குறுதி அளித்துள்ளது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு உடனான 6.7-இன்ச் 1.5K பிஎல்ஓடி கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ப்ராசஸரை பொறுத்தவரை, குவால்காமின் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

இந்த சிப்செட் 12ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, இது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் ஓஐஎஸ் (OIS) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஆதரவுடன் 50எம்பி மெயின் கேமரா + 13எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சார் + 10எம்பி டெலிஃபோட்டோ ஷூட்டர் உள்ளன.

முன்பக்கத்தில், குவாட்-பிக்சல் தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோஃபோகஸ் ஆதரவு உடனான 50எம்பி செல்பீ கேமரா உள்ளது. தூசி மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்பிற்கான ஐபி68-ரேடிங்கையும் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 125W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் டர்போ சார்ஜிங்கிற்கான ஆதரவு உடனான 4,500எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது. குறிப்பிடத்தக்க வேறுபாடாக 12ஜிபி ரேம் ஆப்ஷன் உடன் 125W சார்ஜர் வரும்; 8ஜிபி ரேம் ஆப்ஷன் உடன் 68W சார்ஜர் வரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart Big Billion Days Sale 2024 Motorola Smartphone Offer Discount Prices Revealed
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X