Flipkart Big Billion Days Sale 2021: தள்ளுபடி விலையில் கிடைக்கும் போக்கோ எக்ஸ்3 ப்ரோ.!
பிளிப்கார்ட் வலைத்தளத்தில் மிகவும் எதிர்பார்த்த Flipkart Big Billion Days Sale 2021 எனும் சிறப்பு விற்பனை வரும் அக்டோபர் 7-ம் தேதி தொடங்கி அக்டோபர் 12-ம் தேதி வரை நடைபெறும் எனத் தகவல். இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு சாதனங்களை தள்ளுபடி விலையில் வாங்க முடியும். அதேபோல் பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கும் சிறப்பு விற்பனையில் போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனை தள்ளுபடி விலையில் வாங்க முடியும்.

அதாவது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.18,999-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.16,999-விலையில் வாங்க முடியும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 8ஜபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எக்ஸ்3 ப்ரோ மாடலுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.67-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 1080 x 2400 பிக்சல் தீர்மானம்,
கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 ஆதரவு உள்ளிட்ட பல அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. அதாவது பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனில் 7 என்எம் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர் உடன் அட்ரினோ 640 ஜிபியு ஆதரவும் உள்ளது. எனவே கேமிங் உட்பட பல்வேறு அம்சங்களுக்கு அருமையாக செயல்படும் இந்த ஸ்மார்ட்போன். குறிப்பாக MIUI 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது போக்கோ எக்ஸ்3 ப்ரோ.

போக்கோ எக்ஸ்3 ப்ரோ மாடலில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்தஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி Sony IMX582 சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வீடியோ கால் அழைப்பு வசதிக்கு என்றே 20எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த சாதனம். அதேபோல் இதன் கேமராக்களைபயன்படுத்தி துல்லியமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும்.

போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5160 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு,கைரேகை சென்சார்,டூயல் ஸ்பீக்கர் ஆதரவு என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன்.

4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, ஐஆர் பிளாஸ்டர், ஹெட்ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கும் சிறப்பு விற்பனையில் லேப்டாப், டிவி, டேப்லெட் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களை தள்ளுபடி விலையில் வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications